ரோத ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகொன்று மட்டக்களப்பில் மீட்பு
சட்ட விரோத ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆழ் கடல் மீன் பிடி வள்ளமொன்று நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டம் பெரிய கல்லாறு கடலோரம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வள்ளத்தில் பயணம் செய்ததாகக் கருதப்படும் 30 முதல் 40 பேர் வரை வள்ளத்தை விட்டு இறங்கி தப்பிச் சென்றுள்ளதாக உள்ளூர்வாசிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.வள்ளத்தில்"நீர்கொழும்பு" என சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து அந்த இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் வள்ளம் சோதனையிடப்பட்ட போது மருந்துப் பொருட்கள் ,தண்ணீர்ப் போத்தல்கள் ,பிஸ்கட்கள் மற்றும் சில உணவுப் பொருட்களுடன் எரிபொருட்களும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதியில் பொலிஸாரினால் விசேட தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இது வரை எவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் இல்லை.குறித்த வள்ளத்தில் வெளிநாடொன்றிற்கு சட்ட விரோத குடியேற்றத்திற்காக சென்றிருக்கலாம் என சந்தேகிகப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக