25 அக்டோபர், 2009

அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்த பயன்படும் படகு மட்டக்களப்பில்
புல்மோட்டையில் தங்கியுள்ள குடாநாட்டு மக்களை அனுப்பிவைக்க நடவடிக்கை-

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து திருமலை, புல்மோட்டை நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களில் யாழ். குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். புல்மோட்டையிலிருந்து அழைத்துச் செல்லப்படுபவர்கள் வவுனியா ஆண்டியாப் புளியங்குளம் முஸ்லிம் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டு, அங்கிருந்து ஏ9 பாதையூடாக யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். முதலாவதாக தீவகத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் புல்மோட்டையிலிருந்து இன்று வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு நாளை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. தொடர்ந்து புல்மோட்டையில் தங்கியுள்ள யாழ்.மாவட்டத்தின் ஏனைய பிரதேச மக்களும் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1,500பேர் புல்மோட்டை நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதுமீட்கப்பட்டதாக தகவல்-

மட்டக்களப்பு பெரியகல்லாறு காளிகோவிலுக்கு அருகாமையில் இருந்து மீட்கப்பட்ட படகு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் படகு நேற்று மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேச மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்தே பொலீசார் இப்படகை மீட்டுள்ளனர். சுமார் 50பேர்வரை பயணிக்கக்கூடிய இந்தப்படகில் 30நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படகை நேற்றுமாலை 4.30அளவில் பொலீசார் கரைக்குக் கொண்டுவந்துள்ளதுடன், படகிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த பிரதேசத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்வதற்காகவே படகு தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்திருக்கலாமென பொலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக