ராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபட தடை
இராணுவ அதிகாரிகள்
அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்படுவதுடன் அரசியல் நோக்கங்களுக்காக இராணுவ அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார ஒப்பமிட்டு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
அரசியல் ஈடுபாடு கொண்ட சில தனி நபர்கள் அச்சு ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் இராணுவ அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருவது அவதானிக்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறு இராணுவ அதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்துவது குற்றமாகக் கருதப்பட்டு சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோன்று இராணுவ அதிகாரிகளும் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக