19 ஜூன், 2011

தமிழக முதல்வரை சந்திக்க தமிழ்க் கூட்டமைப்பு

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முற்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தின் உண்மை நிலைகளை எடுத்துக் கூற இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளவும் அக்குழு முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வரை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு விரைவில் இக்குழு இந்தியா பயணமாகலாமென எதிர்ப்பார்க்கின்றது.

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கை வருகை தருவதற்கு முன்னதாக, கூட்டமைப்பு குழு தமிழகம் செல்ல ஆர்வம்காட்டி வருகின்றது. குறிப்பாக வன்னி இறுதியுத்தத்தில் அகதிகளாக்கப்பட்டு முகாம்களிலுள்ளோரது.

நிலை பற்றி ஆராயவும், மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்றியும் நேரில் பார்வையிடவே. தமிழக சட்டமன்ற உறுப்பினர் குழு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா இவ்வறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

எனினும் இலங்கை அரசு, தமிழக சட்டமன்ற உறுப்பினர்களது வருகையை அனுமதிப்பது பற்றி இதுவரை எவ்வித தகவலையும் வெளியிட்டிருக்கவில்லை. ஆயினும் முன்னைய முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தினில் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று வடக்கிற்கு விஜயம் செய்ய இலங்கை அரசு அனுமதித்திருந்தது.

வவுனியா முகாம்களிலிற்கும், குடாநாட்டிற்கும், மலையகத்திற்கும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக