19 ஜூன், 2011

யாழ். குடாநாட்டில் மீண்டும் பதிவு நடவடிக்கை உக்கிரம்

யாழ். குடாநாட்டில் மீண்டும் படைத்தரப்பு பதிவு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில் இப்பதிவுகள் எதற்காக முன்னெடுக்கப்படுகின்றது என்பது பற்றிய குழப்பம் மக்களிடையே தொடர்கின்றது. கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக, பொலிஸார் கிராம சேவையாளர்களுடன் இணைந்து, குடும்பங் களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததை குடும்பப் பதிவு தொடர்பான கணனிப்பதிவுகளை, மேம்படுத்தவே பொலிஸ் பதிவென பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தார்.

எனினும் பொலிஸார் இப்போது குடும்பப் பதிவுகளை பூரணப்படுத்தியுள்ள நிலையில் பொது மக்களது வாகனங்கள் தொடர்பான விபரங்களைப்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். கிராம சேவையாளர் பிரிவுகள் ரீதியாக, பயன்பாட்டிலுள்ள அனைத்து வாகனங்களது விபரங்களும் இப்போது பொலிஸாரால் திரட்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பிர>தேச செயலகங்கள் ரீதியாக இப்பதிவுகள் பேணப்பட்டு நடைமுறையிலுள்ள நிலையில் பொலிஸார் ஏன் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே படையினர் கிராமங்கள் தோறும் ஆரம்பித்திருக்கும், பதிவு நடவடிக்கைகளை, யாழ். மாவட்ட இராணுவத் தளபதி ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். நீதிமன்றம் பதிவு நடவடி க்கைகளை முழுமையாக கைவிடக் கூறியிருக்கவில்லையெனவும் அவர் விபரித்துள்ளார்.

ஆனாலும் படைத்தரப்பின் பதிவு நடவடிக்கைகள் இம்முறை வரையறையேதுவுமின்றியே நடந்துவதாக குற்றஞ்சாட்டுகின்றது. காலைவேளைகளில் முகாம்களிலிருந்து புறப்படும் எட்டு முதல் பத்துப்பேர் வரையி லான சிப்பாய்களைக் கொண்ட குழுவே பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முன்னதாக வீட்டை சல்லடை போட்டுத் தேடும் இவர்கள் சமையலறை மற்றும் குளியலறை யைக் கூட விட்டு வைப்பதில்லையென குற்றஞ்சாட்டப்படுகின்றது. பின்னர் வீட்டு அங்கத்தவர்களது விபரங்கள் திரட்டப்படு வதுடன், எடுத்துவரும் கைத்தொலைப்பேசி களால் குடும்ப அங்கத்தவர்களும், வீடுகளும் புகைப்படம் பிடிக்கப்படுவதாக கூறப்படு கின்றது.

இதனிடையே இப்பதிவு நடவடிக்கைக ளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அச்சுறுத்தப் படுவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. அவ்வாறானவர்களது வீட்டிற்கு, ஆண்கள் எவரும் இல்லாத நிலையில் அங்கு மீண்டும் செல்லும் படையினர், பெண்களை அச்சுறுத்திவருவதாக தமக்கு முறைப்பாடுகள் கிட்டியுள்ளதாகவும் அத்தரப்புகள் மேலும் தெரிவிக்கின்றன. எனினும் பதிவுகளை மேற்கொண்ட வீடுகளுக்கு அது தொடர்பான ஆவணங்கள் எதனையும் வழங்க படையினர் மறுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக, குடும்ப அங்கத்தவர்களில் எவராவது விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தனரா? காணாமல் போயுள்ளனரா? தடுப்பு முகாம்களில் உள்ளனரா என்பது பற்றியே கேள்விகள் அமைகின்றன. அத்துடன் புலம் பெயர்ந்த நாடுகளில் தங்கியுள்ள அங்கத்தவர் கள் பற்றியும் அதிகம் கேள்வி எழுப்பப் படுவதாக கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக