19 ஜூன், 2011

அளவெட்டித் தாக்குதல் அரசாங்கத்தின் திட்டமிட்ட சூழ்ச்சியே: விக்கிரமபாகு



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்லர் என்பதைக் காட்டும் முயற்சியின் முதற்கட்டமே யாழ். அளவெட்டியில் தேர்தல் கூட்டத்தில் இராணு வத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமாகும் என புதிய இடதுசாரி முன்னணி யின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன குற்றம் சாட்டுகின்றார்.

யாழ். அளவெட்டியில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர் பான கலந்துரையாடலின்போது அங்கு சிவில் உடையில் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதுமட்டுமின்றி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாக்க முற்பட்டனர். இது தொடர்பாக விக்கிரமபாகு கருணாரட் னவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வடக்குக் கிழக்கில் அமோக வெற்றி ஈட்டிய தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தாங்கள்தான் என்பதைக் கூட்ட மைப்பினர் நிரூபித்தனர். மக்களும் தங்களது வாக்குப் பலத்தின் மூலம் அதனை உறுதிப்ப டுத்தினர். ஆனால், அரசோ தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று எவரும் இல்லை எனக் கூறி வருகின்றது.

எனவே, நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் கூட்டமைப்பு வடக்கில் அதிக சபைகளைக் கைப்பற்றினால் மீண்டும் கூட்டமைப்பினர் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பது உறுதியாகிவிடும்.

மக்கள் தங்களுடைய வாக்குப்பலத்தின் மூலமே தங்களின் ஏகப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வர். எனவே தான் வடக்கு, கிழக்கு மக்கள் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களித்து தங்களின் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்தனர். ஏகப் பிரதிநிதிகள் யார் என்பதைத் தேர்தல் உறுதி செய்துவிட்டது.

இந் நிலையில்தான், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர் என்பதை நிரூபிக்கும் வேலைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன் முதற்கட்டமே அளவெட்டியில் இடம்பெற்ற தாக்குதல் சம் பவமாகும்.

இச் சம்பவமானது மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்கும் ஒரு செயலாகும். அத்து டன் இது கண்டிக்கத்தக்கதொரு விடயமுமா கும். சிவில் உடையில் வந்தவர்கள் தான் தாக்குதல் நடத்தினர் எனக் கூறப்படுகின்றது. இந் நிலையில் அது அரசின் சூழ்ச்சி என்பது தெளிவாக எமக்குப் புரிகின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக