2 மே, 2011

மக்களும் கலந்துகொண்ட தொழிலாளர் தினத்தில்



01.05.2011



சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்துகொண்ட தொழிலாளர் தினத்தில் தமிழீழமக்கள் விடுதலைக்கழக சுவிஸ்கிளையும் கலந்து கொண்டது. இதில்



தமிழினத்தின்; பிரச்சனைக்கு அரசியல் தீர்வை இலங்கை அரசு காணவேண்டும் வெறும் பேச்சுவார்த்தையாக இருக்காமல் தீர்வாக இருக்கவேண்டும்.



அமைதியும், பாதுகாப்புமுள்ள சுதந்திரத்தை நாம் விரும்புகின்றோம்



அரசியல் கைதிகளை இலங்கை அரசே விடுதலை செய்



சர்வதேசமும் எமது அரசியல் தீர்வுக்கு தனது நியாயமான பங்களிப்பை செய்யவேண்டும்.



அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே



போன்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை தாங்கியவண்ணம் கழககஉறுப்பினர்கள், ஆதரவளர்கள், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி சுவிஸ் கிளைத் தோழர்களும் தோழமையுடன் கலந்துகொண்டனர்.



இவ் மேதின ஊர்வலமானது சூரிச் பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள இருந்து காலை 10.15 மணிக்கு ஆரம்பமாகி முடிவடைந்தது.

இவ் மேதினத்தில் த.ம.வி.கழக சுவிஸ் கிளையின் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட அனைவருக்கும் கழக சுவிஸ்கிளை தனது தோழமையான நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக