சமாதானத்தின் சின்னமான, ஒலிவ் மரத்தின் சிறு கிளையொன்றை தன்னுடைய அழகான ஊதா நிற சொண்டில் பற்றிக்கொண்டு ஆகாயத்தில் கம்பீரமாக, அமைதியாக பறந்து கொண்டிருக்கும், இலங்கை என்ற வெண்புறாவை கொத்திச் சென்று, அழித்து விடுவதற்கு இன்னுமொரு கொடிய கருடன் அதற்கருகில் வலம் வந்து கொண்டிருக்கின்ற ஆபத்தான நிலையை இந்நாட்டு மக்கள் இன்று எதிர்நோக்கிய வண்ணம் இருக்கிறார்கள்.
எங்கள் தாய் நாட்டை உலக வரைபடத்திலிருந்து நிரந்தரமாக அழித்துவிடும் தீய எண்ணம் கொண்ட, சர்வதேச பிற்போக்குவாத சக்திகளும், மற்ற நாடுகளை அழித்துவிடுவதில் ஆனந்தம் காணும், பிறருக்கு துன்பம் இழைத்து இன்பம் அடையும் நோயுடைய சில வல்லமைமிக்க நாடுகளும், எல். ரி. ரி. ஈ யை ஆதரிக்கும் குழுக்களும், புலம்பெயர்ந்த, விரல்விட்டு எண்ணக்கூடிய சில தமிழ் குழுக்களும் இன்று தங்கள் பணப்பலத்தை பிரயோகித்து மேற்கொண்டுவரும் நாசகார வேலைகளுக்கு எதிராக, உலகிலுள்ள இலங்கையின் நட்பு நாடுகளின் ஆதரவை திரட்டுவதை விட எங்களுக்கு வேறு வழியில்லை.
எனவே, மிகவும் மதிநுட்பமாக இராஜதந்திரத்தை பயன்படுத்தி, உலகநாடுகளின் உணர்வுகளை புண்படுத்தாத வகையில், நாட்டை விடுவித்த பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி ஓரிருவாரங்களின் போது அப்பாவி தமிழர்களை மனிதாபிமானமற்ற முறையில் இலங்கை இராணுவத்தினர் அழித்துவிட வில்லை என்ற உண்மையை நிரூபிக்கக்கூடிய வகையில் பிரசாரங்களை சர்வதேச ரீதியில் முடுக்கி விடுவதன் அவசியத்தை உணர்ந்திருக்கும் அரசாங்கம் அதற்கான சகல ஏற்பாடுகளையும் இப்போது காலதாமதமின்றி ஆரம்பித் துள்ளது.
அதைவிடுத்து, அநாவசியமாக பொதுமேடைகளில் தருஸ்மன் அறிக்கையை கண்டித்து பேசுவதில் நாட்டுக்கு தீமையே ஒழிய நன்மை ஏற்படப்போவதில்லை என்படுதயும் நன்கு புரிந்து கொண்டுள்ள இன்றைய அரசாங்கம், இன்றைய சூழ்நிலையில் மக்கள் மிகவும் அவதானமாக, ஆத்திரமடையாமல் வெளிநாட்டவர்கள் எங்கள் மீது போலி குற்றச்சாட்டு களை சுமத்தி பிரச்சினைகளை மேலும் அதிகரிப்பதற்கு இடமளிக்கா மல், பொறுமையாக இருக்க வேண்டு மென்றும் மக்களுக்கு பரிந்துரைக்கி ன்றது.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை க்கு எதிராக உருவாகி வரும் இந்த ஆபத்தை, முறியடிக்க வேண்டுமானால் இந்நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, கட்சி, பிரதேச பேதமின்றி ஒரே குரலில் இலங்கையர் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டுமென்றும், அதன் மூலமே மீண்டும் இலங்கையின் நற்பெயரையும், கீர்த்தியையும், இறைமையையும் சர்வதேச அரங்கில் மீண்டும் கொடி கட்டிப்பறக்கச் செய்யலாம் என்ற நிலையில் அரசாங்கம் இருந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக