29 மார்ச், 2011

தடை செய்யப்பட்ட இணையத் தளங்களை சிறுவர்கள் பார்வையிடாதிருக்க நடவடிக்கை

டை செய்யப்பட்ட இணையத் தளங்களை சிறுவர்கள் பார்வையிடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இது தொடர்பில் பெற்றோரை அறிவுறுத்துவதற்கும் தீர்மானித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதன்பிரகாரம் தொலைத்தொடர்பு இணையத்தள சேவை வழங்குநர்களினூடாக பெற்றோரை அறிவுறுத்த விருப்பதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஓர் இணையத் தளத்தை சிறார்கள் பார்வையிடுவதை தடுப்பது வினைத்திறனானதாக மாட்டாது.

ஏனெனில், சிறார்கள் தடைசெய்யப்பட்ட அந்த இணையத்தளத்தை பார்வையிடுவதற்கு வேறு வழிகளை கண்டறியக்கூடும். சமூக வலைத்தளங்களை சிறார்கள் பார்வையிடுவதை தடுப்பதில் நாம் செய்யக்கூடிது அதிகமில்லை. எனவே, தமது பிள்ளைகள் விரும்பத்தகாத இணையத்தளங்கள் பார்வையிடுவதை பொருத்தமான கணினி மென்பொருட்களை பயன்படுத்தி கட்டுப்படுத்துமாறு பெற்றோர்களிடம் நாம் இணைய சேவை வழங்குநர்கள் மூலம் கோருகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக