4 பிப்ரவரி, 2011

5ம்கட்ட கொடுப்பனவையும் வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானம்






சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாம் கட்ட நிதியுதவியாக 2166 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.

2011ஆம் ஆண்டு இலங்கையில் 7 வீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி கலாநிதி கொஷி மதாய், இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி சாதகமான நிலையில் இருப்பதால் இத்தீர்மானத்தை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிரான ஒதுக்கீடுகள் போதியளவு இருக்கும் நிலையில், 2011 ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் முன்வைத்திருக்கும் வரவு- செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் அபிவிருத்தி செய்வதை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டி ருப்பதாகவும் கூறினார்.

இவற்றைக் கவனத்தில் கொண்டு இலங்கைக்கான ஐந்தாவது, கட்டத்தை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்ததாகவும் மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.2009 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இதுவரை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

ஐந்தாவது கட்ட நிதியுதவி எதிர்வரும் சில தினங்களில் இலங்கையிடம் கையளிக்கப்படும் எனக் குறிப்பிட்ட கொஷி, ஆறாவது கட்ட நிதியுதவி தொடர்பாக ஆராய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராயும் என்றும் கூறினார்.

இலங்கையின் அபிவிருத்தி உறுதியடை ந்து செல்கிறது. உணவு மற்றும் மரக்கறிகளின் விலைகள் அதிகமாகக் காணப்படுகின்றபோதும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு ஒதுக்கீடுகள் அதிகரித்துள்ளன. கடந்த காலங்களில் ஏற்பட்ட சறுக்கல்களை நிவர்த்தி செய்யும் வகையில் 2011 ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக