4 பிப்ரவரி, 2011

சமாதானத்தை பலப்படுத்த சுதந்திர தினத்தில் உறுதி பூணுவோம்





எமது மக்களுக்கு சமூக மற்றும் பொரு ளாதார அபிவிருத் தியை பெற்றுக் கொடுப்பதற்காக தற் போது நிலைநாட்டப் பட்டிருக்கும் சமாதா னம் மற்றும் ஸ்திரத் தன்மையை மேலும் பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தி.மு. ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுபீட்சம் நிறைந்த எதிர்காலம் ஒன்றினை எதிர்பார்த்த வளாக, இலங்கைத் தாய் 2011, பெப்ரவரி 04ம் திகதி தனது 63 வது சுதந்திர தினத் தைக் கொண்டாடு கின்றாள்.

சுமார் மூன்று தசாப்தங்களாக மக்க ளின் இயல்பு வாழ்க் கையைச் சீர்குலைத்த நாட்டின் அபிவிருத் தியைப் பின்தள்ளிய பயங்கர வாதத்தை முற்றாக ஒழித்த அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சமாதானத் தையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்.

இடம்பெயர்ந்தோர் சகலரையும் மீள் குடியேற்றுவதன் மூலமும், அவர்களின் வீடுகளை மீண்டும் நிர்மாணிப்பதன் மூலமும், அவர்களின் கிராமங்களைப் புனரமைப்பதன் மூலமும் மற்றும் அவர்களது வாழ்க்கைத் தொழில்களை மீளக் கட்டியெழுப்புவதன் மூலமும் அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையை ஸ்திரப்படுத்தியுள்ளது.

இந்த மாகாணங்களில் கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், இன்னும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த முயற்சிகளின் ஊடாக அந்த மாகாணங்களில் துரித பொருளாதார வளர்ச்சியை மற்றும் அபிவிருத்தியை ஏற்படுத்தலாம்.

பல்வேறு பாரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதனால் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தெற்கிலும் பொருளாதார வளர்ச்சியையும், அபிவிருத்தியையும் காணக்கூடியதாக இருக்கிறது.

அயல்நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது தேசிய வருமானம் 8% என்ற வருடாந்த உயர் பொருளாதார வளர்ச்சி வேகத்தையும், 2053 அமெரிக்க டொலர்களைக் கொண்ட தனிநபர் வருமானத்தையும் கொண்டிருப்பதனை எங்களுக்குப் பெருமிதத்துடன் கூறிக்கொள்ள முடியும்.

“மஹிந்த சிந்தனை"யில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு செயன்முறை ரீதியான கொள்கைகளைப் பூரணமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாடு மேலும் வளர்ச்சியடையும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

மக்களின் கூட்டு முயற்சி, ஒற்றுமை மற்றும் எதையும் தாங்கிக் கொள்ளும் தன்மை என்பவற்றின் மூலம் வெள்ளம், மண்சரிவு, கோடை போன்ற இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் தற்காலிக பின்னடைவுகளை எம்மால் இலகுவாக வெற்றி கொள்ள முடியும்.

எமது மக்களுக்கு துரித சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியைப் பெற்றுக் கொடுப்பதற்காக தற்போது நிலைநாட்டப்பட்டிருக்கும் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையைப் மேலும் பலப்படுத்தல் வேண்டும்.

சந்தோசமான, செளபாக்கியமிக்க நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஒற்றுமையாக, சமாதானமாக, நிதானமாக அனைவரும் ஒன்றாக நடவடிக்கை மேற்கொள்வோம் என இலங்கையர்களான நாம் இந்தச் சுதந்திர தினத்தில் உறுதிபூணுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக