10 ஜனவரி, 2011

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் 37ம்ஆண்டு


ஆண்டு தைமாதம் 10ம்திகதி யாழ். முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட 37ம்ஆண்டு நினைவுதினம் இன்றாகும். 37வது ஆண்டு நினைவு தினம் இன்று சீரற்ற காலநிலை காரணமாக மிகவும் எளிமையான முறையில் நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இன்றையதினம் முற்பகல் புளொட் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் புளொட் உறுப்பினர்கள்- மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு படகுகளில் கொண்டுசெல்லும் பணியினை புளொட் உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 20ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் நேற்றும் இன்றும் நான்கு இயந்திரப்படகுகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, நாவற்காடு, வவுணதீவு, கரவெட்டி, கன்னங்குடா, சேத்துக்குடா, புதூர், ஈச்சந்தீவு, காரையாக்கன்தீவு ஆகிய பிரதேசங்களிலேயே புளொட் உறுப்பினர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து கல்லடி பாலர் பாடசாலையில் தங்கியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு சமைத்த உணவினையும் நேற்று புளொட் அமைப்பினர் வழங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக