14 நவம்பர், 2010

புகைப்படங்களை சாட்சியமாக ஏற்பதா ஐ.நா நிபுணர்கள் குழுவே தீர்மானிக்க வேண்டும் : ஐ.நா பிரதி பேச்சாளர்

இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான கொலைகள் நடைபெற்றுள்ளமையை பெருமளவிலான புதிய புகைப்படங்கள் வெளிப்படுத்துவதாக இன்னர் சிட்டி பிரஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் கேள்வியொன்றையும் இன்னர் சிட்டி பிரஸ் கேட்டுள்ளது. இதனை சாட்சியமாகக் கொண்டு செயலாளர் நாயகத்தின் மூவரடங்கிய நிபுணர்கள் குழு இலங்கையின் பொறுப்புக் கூறும் தன்மை குறித்து பரிசீலிக்க முடியுமா அல்லது பரிசீலிக்கப்படுமா என்பதே அந்தக் கேள்வியாகும்.

அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஹக், அதனை நிபுணர்கள்குழு தீர்மானிக்க வேண்டும் என்றும் இந்தப் படங்கள் அதற்குள் அடக்கப்படக் கூடியவையா என்பதையும் தீர்மானிப்பது குழுவின் பொறுப்பாகும் என்றும் கூறினார்.

ஆனால், ஐக்கிய நாடுகள் சபையும் பேஷின் ஆலோசனைக் குழுவும் அதனை சாட்சியாக நோக்கவில்லை.ஏனைய பல ஆவணங்கள் இருந்த போதிலும் குறைந்தபட்சம் ஐ. நாவின் இணையத்தளத்திலாவது பேஷின் ஆலோசனைக் குழு ஏன் தனது கரத்துரைகளை வெளியிடவில்லை என்று இன்னர் சிட்டி பிரஸ் கேள்வியொன்றை எழுப்பிய போது ஹக் அதற்கு விளக்கமளிக்கவில்லை. புகைப் படங்களை வெளியிடும் ஊடகத்திற்கு விஸா வழங்க இலங்கை மறுப்பது தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் எதனையும் கூறவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக