14 நவம்பர், 2010

ஜனாதிபதியின் 2வது பதவியேற்பு; நாடு முழுவதும் தேசிய நிகழ்வுகள்




ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் பிறந்த தினத்தையொட் டியும், இரண்டாவது பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டும் நாடு முழுவதும் தேசிய நிகழ்வு கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாளை 15 ஆம் திகதி தேசத் துக்கு நிழல்தரும் 11 இலட்சம் மரக்கன்றுகள் நாட்டப்படுகின்றன. காலை 10:07 முதல் 10:18 வரை யிலான 11 நிமிடங்களுக்குள்ளான சுபவேளையில் இந்தக் கன்றுகள் நாட்டப்படும்.

மத வழிபாட்டுத் தலங்களிலும் ஜனாதிபதி செயலகம் முதல் சகல அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள், தனியார் நிறு வனங்கள் ஆகியன மரக்கன்று நடும் நிகழ்வில் பங்கேற்கின்றன. தவிரவும் சகல வீட்டுத் தோட்டங் களிலும் மரக்கன்றொன்றை நடுவதற்கும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

தேசத்திற்கு நிழல் தரும் மரம் நடுகை திட்டத்தின் கீழ் நாட்டப்படும் கன்றுகளைப் பராமரிப் பதற்கான திட்டமொன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.

நாட்டுக்கு மதிப்பைத் தேடித் தந்த உண்மையான தேசிய தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்குச் செலுத்தும் மரியாதையாக மரக்கன்று நாட்டும் திட்டம் மேற் கொள்ளப்படுவதாக சுற்றாடல்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

இராணுவம்

இராணுவத்திற்குச் சொந்தமான சகல விவசாய நிலங்களிலும் ஆயிரக் கணக்கான மரக்கன்றுகள் நாளை நாட்டப்படுகின்றன.

இராணுவத்தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் தலைமையில் பனாகொடை இராணுவ குடியிருப்புத் திட்டத்தின் பிரதான நிகழ்வு நடைபெறும்.

மேலும், இராணுவ விவசாய நிலம் அமைந்துள்ள கன்டல்காடு, குட்டிகலை உள்ளிட்ட இடங்களில் நாளை 15ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ஆயிரக் கணக்கான படைவீரர்களின் பங்குபற்று தலுடன் மரக்கன்றுகள் நாட்டப்படும்.

பாரிய அளவான பாற்சோறு

அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள வைபவங்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி புதன்கிழமை முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறுகின்றன. இதில் சுதந்திர சதுக்கத்தில் தயாரிக்கப்படும் பாரிய அளவிலான பாற்சோறு முக்கிய இடம் பெறுகிறது. ஏழாயிரம் கிலோ அரிசியில் 65,000 பேர் உண்ணக்கூடிய பாரிய பாற்சோறு இங்கு தயாரிக்கப்படுகிறது. இதனை உலகில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய முதலாவது பாற்சோறு என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதே அரசாங்க தகவல் திணைக்களத்தின் இலக்காகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை யொட்டியும், இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டும் எதிர்வரும் 19 ஆம் திகதி பூஜைவழிபாடுகளும் பெளத்த பாராயணமும் நடைபெற்றவாறு காலி துறைமுகத்திலிருந்து அம்பாந்தோட்டை துறைமுகம் வரை கப்பலொன்று செல்கின்றது.

தவிரவும், நாடு முழுவதிலுமுள்ள 10,400 பெளத்த விஹாரைகள் உள்ளிட்ட சர்வமத வழிபாட்டுத் தலங்களிலும் பூஜை நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக