14 நவம்பர், 2010

தேசிய அடையாள அட்டைகளை வீட்டு முகவரிக்கே அனுப்ப நடவடிக்கை


ஜனவரி முதலாம் திகதி முதல் வீட்டு முகவரிக்கே தேசிய அடையாள அட்டைகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர தெரிவித்துள்ளார்.

இதுவரைகாலமும் பிரதேச செயலகத்துக்கு அனுப்பி வைக் கப்பட்டு, அங்கிருந்து கிராம உத்தியோகத்தர் ஊடாகவே தேசிய அடையாள அட்டை உரியவருக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இதில் ஏற்படும் தாம தத்தை தவிர்க்கும் வகையிலேயே இந்த புதிய முறை மேற்கொள் ளப்படவுள்ளது.

எதிர்காலத்தில் தேசிய அடை யாள அட்டை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்போர் விண்ணப் பத்துடன் முகவரியிட்டு முத்திரை ஒட்டிய தபாலுறையை இணைத்து அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

க. பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை இம்மாத முடிவுக்குள் பெற்றுக் கொடுக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக