14 நவம்பர், 2010

தீர்வு முயற்சியில் உடனடி அணுகுமுறை


தமிழ் மக்களின் சார்பில் பேசும் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இன்று அம் மக்கள் முகங்கொடுக்கும் பல பிரச்சினைகளை முன்வைக்கின்றன. பிரச்சினைகளை முன் வைப்பவர்கள் அவற்றின் தீர்வுக்காகச் சரியான தடத்தில் செயற் படுவதாகத் தெரியவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் என இனங்காட்டப்படும் சகல பிரச்சி னைகளினதும் நதிமூலமாக இனப் பிரச்சினை இருக்கின்றது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாததாலேயே இப்போது பேசப்ப டும் சகல பிரச்சினைகளும் தோன்றின. இனப் பிரச்சினைக்கு இறு தியான தீர்வு இல்லைத நிலையில் தீர்வை நோக்கிய நகர்வு இடம் பெற்றிருந்தாலும் இப்போது பேசப்படுகின்ற பிரச்சினைகள் தோன் றியிருக்கமாட்டா.

இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சி சறுக்குமர விளையாட் டுப் போல் ஆகிவிட்டது. அதாவது சாண் ஏற முழம் சறுக்கும் கதையாகிவிட்டது. பண்டா - செல்வா ஒப்பந்தம், வடக்கும் கிழக் கும் இணைந்த மாகாண சபை, பிராந்திய சபைகள் என்று ஒவ் வொரு தீர்வும் கைதவறிப்போய் இன்று மிகவும் பின்னடைவான நிலைக்கு அரசியல் தீர்வு முயற்சி வந்திருக்கின்றது. இதற்கான காரணம் என்ன என்று தமிழ் மக்கள் நிதானமாகச் சிந்திக்கவேண் டும். சிங்கள அரசியல் தலைவர்கள் ஒருபோதும் தீர்வுக்குச் சம்ம திக்கப் போவதில்லை என்று தமிழ்த் தலைவர்கள் வழமையாகக் கூறுவதைக் கேட்டுவந்த நிலையிலிருந்து கொஞ்சம் விடுபட்டு நிதானமாகச் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமி ழ்த் தலைவர்கள் புத்திசாலித் தனமாகச் செயற்பட்டிருந்தால் மேலே குறிப்பிட்ட தீர்வுகள் கைதவறிப் போகாமல் செய்திருக்க லாம். இன்று அந்தத் தீர்வுகள் எட்டாத தூரத்துக்குப் போய் விட்டன. தலைவர்கள் விட்ட தவறுகளே இதற்குக் காரணம். அதா வது கிடைக்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு இறுதித் தீர்வுக்காகத் தொடர்ந்து முயற்சிக்கும் நடைமுறையைப் பின்பற்றாததே இன் றைய அவல நிலைக்குக் காரணம்.

பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சி சித்தாந்தங்களால் மாத் திரம் வழிநடத்தப்படக்கூடாது. சித்தாந்தம் மாத்திரமன்றி யதார்த்த மும் முக்கியமானது. யதார்த்தத்துக்கு முரணான கோரிக்கையை வலியுறுத்தி யதார்த்தபூர்வமான தீர்வை நிராகரிப்பது எப்போதும் பாரதூரமான விளைவையே தரும். இதை அனுபவத்தில் கண்டு விட்டோம். தலைவர்களின் இத்தவறுக்கு மக்கள் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமல்ல. ஏராளம் உயிர்கள் பலியாகிவிட்டன. பெரும ளவு சொத்துகள் நாசமாகிவிட்டன. வரலாற்று ரீதியான வாழ்புலங் களிலிருந்து வெளியேறும நிலை பலருக்கு ஏற்பட்டது.

தலைவர்கள் மக்களை முன்னிறுத்தியே தீர்வு பற்றிச் சிந்திக்க வேண் டும். இறுதியான அரசியல் தீர்வை அடையும் சூழ்நிலை இப்போது இல்லை என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்ட விடயம். வடக்கும் கிழக்கும் இணைந்த தாயகம் என்றும் முழுமையான அதிகாரப் பகிர்வு என்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கூறும் கருத்துகள் இறுதி இலக்காக இருக்கலாமேயொழியச் சமகாலத் தீர்வு முயற்சியில் அவற்றை இணைப்பது சாதகமான பலனைத் தருவதாக அமையாது.

மக்களின் அன்றாடப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரக்கூடியதும் நடை முறைச் சாத்தியமானதுமான தீர்வைப் பெறுவதற்கான முயற்சியே உடனடித் தேவை. இது இறுதித் தீர்வை அடைவதற்குத் தடையாக அமையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக