14 நவம்பர், 2010

சிறுபான்மை அரசியலை அழிக்கும் செயற்பாடே உள்ளுராட்சி தேர்தல் சட்ட திருத்தமாகும்-

இடதுசாரி முன்னணி- சிறுபான்மை அரசியலை அழிக்கும் செயற்பாடே உள்ளுராட்சி தேர்தல் சட்ட திருத்தமாகும். இதற்கு துணைபோகின்ற சகல சிறுபான்மை அரசியல்வாதிகளும் மிகப்பெரிய வரலாற்றுத் துரோகத்தை இழைக்கின்றனர் என்று முஸ்ஸீம் இடதுசாரி முன்;ணணியின் பொதுச்செயலர் ஆ.சு.ஆ.பைசால் 11.11.2010அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சிறுபான்மை கட்சிகளை அழிக்க சதித்திட்டம் தீட்டியிருக்கிறது. இச்சதியை முறியடிப்பதற்காக சிறுபான்மை முஸ்ஸீம், தமிழ் கட்சிகள் ஒருமித்;து உள்ளுராட்சி; தேர்தல்முறை திருத்தச் சட்டமூலத்தை நிராகரிக்க வேண்டும். இரண்டு பேரினக் கட்சிகள் தவிர்ந்த சகல சிறுபான்மைக் கட்சிகள் சிறுகட்சிகள் சகலதையும் ஜனநாயக அரசியல் நீரோட்டத்திலிருந்து ஓரங்கட்ட எடுத்துக் கொள்ளப்படும் மிகவும் பாரதூரமான இந்த வரலாற்று சதிமுயற்சி குறித்து சிறுபான்மையின மக்கள், புத்திஜீவிகள் விழிப்பாக இருக்கவேண்டும். தேர்தலில் போட்டியிட நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும்போது ஒருகட்சி அல்லது சுயேச்சைக்குழு ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாக தாக்கல் செய்யமுடியாது. 14 வட்டாரத்துக்கும் மேலதிகமான நான்கு அபேட்சகர்களின் நியமனப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவேண்டும். கட்சி சார்பாக போட்டியிடும் ஒரு அபேட்சகருக்கு ரூபா 5000 வீதமும் சுயேச்சைக்குழு அபேட்சகர் ஒருவர் ரூபா 20,000 வீதமும் கட்டுப்பணம் செலுத்தவேண்டும். தொடர்ந்து இடம்பெறவுள்ள உள்ளுராட்சி அதிகார சபைகள் மற்றும் நிர்வாக எல்லை மீள்நிர்ணயம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகளும் அவசரஅவசரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதனூடாக சிறுபான்மையினர் நலன் பாhதிக்கப்படுகின்ற அபாயகரமான ஒரு சூழ்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் பேரின அரசியல் சதி அரங்கேறுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக