17 அக்டோபர், 2010

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்: முழுமையான மீள்குடியேற்றத்துக்கு ஆளுநர் பணிப்பு


முல்லைத்தீவு மாவட்டத்தில் மிதிவெடி அகற்றும் பணியை துரிதமாக்குவதுடன், 127 கிராம சேவகர் பிரிவிலும் முழுமையாக மக்களை மீளக்குடியமர்த்தவும் நட வடிக்கைகள் எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப் புரை விடுத்தார்.

இம்மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களும் உங்களது சொந்த மக்கள் என்ற உணர்வுடன் சகல அரச அதிகாரிகளும், மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் செயற்பட வேண்டும் என அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் கேட்டுக்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி மற்றும் மீளக்குடியேற்றம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி மற்றும் அமைச்சர் ரிஷாத் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவு அரச அதிபர் தலைமையில் நடைபெற்றது. நேற்றுக் காலை 10.00 மணிக்கு ஆரம்பமான கூட்டம் பகல் 1.30 வரை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹணூனைஸ் பாரூக் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய், மாந்தை மேற்கு, ஒட்டு சுட்டான், கரைத்துறைப்பற்று, புதுக் குடியிருப்பு போன்ற ஐந்து பிரதேச செயலகங்களிலுமுள்ள 127 கிராம சேவகர் பிரிவுகளில் 86 கிராம சேவகர் பிரிவுகளில் மட்டுமே நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட்டுள் ளன என்பதும் இக்கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டது.

எஞ்சியுள்ள கிராம சேவகர் பிரிவுகளிலும் துரிதமாக மிதிவெடிகளை அகற்றி மக் களை மீளக்குடியமர்த்துமாறும் ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இம்மாவட்டத்தில் அடுத்த போகத்தின் போது 34,000 ஏக்கர் விளை நிலங்களிலும் செய்கை பண்ணவென 42,000 மூடை விதைநெல் விவசாயிகளுக்கு வழங்கப்பட் டுள்ளது. என்றும் தெரிவிக்கப்பட்டதுடன், கடற்றொழில் துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள், வள்ளங்கள் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் ஆராயப் பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆறு ஆஸ்பத்திரிகளுக்கும் மேலதிகமாக 13 டொக்டர்களை புதிதாக நியமனம் செய்வதெனவும் எதிர்வரும், 21 ஆம் திகதி இந்த டொக்டர்கள் ஆஸ்பத் திரிகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 109 பாடசாலைகளில் 73 பாடசாலைகள் இயங்குகின்றன. இவற்றில் 11,092 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். 796 ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். எஞ்சியுள்ள 36 பாடசாலைகளை புனரமைக்கவும், அவற்றுக்குரிய ஆளணியை பெற்றுக் கொடுப்பது பற்றியும் இங்கு ஆராயப் பட்டது. முல்லைத்தீவு - புளியங்குளம் வீதி, ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதி, முல்லைத்தீவு - கொக்கிளாய் ஊடான புல்மோட்டை வீதி புனரமைப்பு தொடர் பாகவும் நேற்றைய கூட்டத்தில் ஆராயப் பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி யுடன் மாங்குளம் - முல்லைத்தீவு வீதி யையும், மாங்குளம் - வெல்லாங்குளம் வீதியையும், கரச்சி - முல்லைத்தீவு வீதியையும் கார்பட் தரத்தில் புனரமைப்பு செய்வதெனவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் முல்லைத்தீவு அரச அதிபர் ஜீ.பி. வேதநாயகன் உட்பட மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், இராணுவ உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக