16 அக்டோபர், 2010

ரியாத்: சவூதி அரேபியாவில் ரயில்வே திட்ட கட்டுமானத்துறையில்

பணியாற்றிய சீன நாட்டினர் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அவர்களை அந்நாட்டு அரசு உடனடியாக சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தது. சவூதி ‌கெஜட் எனும் பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது ,சவூதி அரேபியாவில் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் சீன நாட்டினர் 18 மாத ஓப்பந்த அ‌டிப்படையில் பணியில் சேர்ந்தனர். இவர்கள் கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் ‌பணியில் ‌சேர்ந்தனர். இங்கு அவர்களுக்கு சம்பள உயர்வு அளிக்காமலும், வேலைப்பளு அதிகம் தரப்படுவதாகவும் கூறி 100 சீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கட்டுமான நிறுவன அலுவலகத்தினையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 16 சீன தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் உடனடியாக சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் சீன வர்த்தகத்துறை அமைச்சர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதே போன்று சவூதியில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சீனர்களுக்கு அந்நாடு குறைந்த ஊதியமே வங்கிவருகிறது. சீனர்களை ‌ ‌கொத்தடிமைகளாக்குகிறது என்று கூறியள்ளதாக அந்த பத்திரிகையில்கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக