16 அக்டோபர், 2010

புனர்வாழ்வு பெற்ற 500 பேர் நேற்று உறவினர்களிடம் ஒப்படைப்பு






முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சுமார் 500 பேர் நேற்று (15) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இது தொடர்பான நிகழ்வு வவுனியா கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விடுவிக்கப்பட்டவர்களுள் கூடுதலானோர் பெண்களாவர்.

புனர்வாழ்வு காலத்தில் இவர்கள் பெற்ற பயிற்சிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எம். எஸ். சதீஸ்குமார் தெரிவித்தார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 300 பெண்கள் உட்பட 500 பேர் பெற்றோர்கள், பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் பிரி கேடியர் சுனந்த ரணசிங்க, வன்னி பாது காப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, மாவட்ட அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக