29 ஆகஸ்ட், 2010

தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து கனடாவில் ஆர்ப்பாட்டம்

இலங்கைத் தமிழ் அகதிகள் 492 பேரை கனடிய அரசாங்கம் தடுப்புக் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து சுமார் 100 ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமை வன்கூவர் கலாபவனத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர் சன் சீ கப்பல் மூலம் தமிழ் அகதிகள் பிரிட்டிஷ் கொலம்பியாவை சென்டைந்தமை குறிப்பிடத்தக்கது.இதில் பயணித்த 492 பேரும் குடிவரவு குறித்த நடைமுறைகளின் பேரில் பிரிட்டிஷ் கொலம்பியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

'அகதிகள் தொடர்பில் விரோத எண்ணமும் அச்சமும் தெரிவிக்கப்பட்டு வருவதைக் கண்டு நாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். அரச அதிகாரிகள் அகதிகள் குறித்து பயங்கரவாதிகள், குற்றச் செயலில் ஈடுபட்டோர் என்ற எண்ணங்களையே கொண்டுள்ளனர்" என ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவரான ஹர்ஷா வாலியா தெரிவித்தார்.

இதேபோன்று அகதிகள் ஆதரவு கூட்டங்கள் விக்டோரியா, டொரன்டோ ஒட்டாவா, மொன்ட்றியல் மற்றும் கிச்சனர் வாட்டர்லூவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக