16 ஆகஸ்ட், 2010

கனடா சென்றடைந்தோர் நிலை : கனேடியத் தமிழர் பேரவை

கப்பலில் கனடா சென்றடைந்தோரில் குழந்தைகளையும் பெண்களையும் நேரில் சந்திக்கக் கனேடியத் தமிழர் பேரவை விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தனித்துப் பயணித்த 35 பெண்களைக் கனேடியத் தமிழர் பேரவைச் சந்தித்துப் பேசியது. ஏனைய பெண்கள் தங்கள் குழந்தைகளோடு வேறொரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்தோரைச் சந்தித்த பின்னர், இவர்கள் பயமற்றவராயும் ஓரளவு மன அமைதியுடனும் காணப்பட்டனர் எனப் பேரவைத் தெரிவிக்கின்றது.

கனேடியத் தமிழர் பேரவை,

"அவர்களது உரிமைகள் மற்றும் தொடரவிருக்கும் செயற்பாடுகள் பற்றி விளக்கியதுடன் தொடர்ந்து எவ்வாறு அவர்களது விசாரணைகள் நடைபெறும் என்பன போன்ற தெளிவான விபரங்களடங்கிய, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.

இவர்கள் தங்கள் உறவினருக்கோ நண்பருக்கோ உடனடியாகத் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த ஏதுவாக ஒவ்வொருவரது கணக்கிலும் (தடுப்பு முகாமில் இவர்களுக்கென அரசு ஏற்படுத்தியிருக்கும் கணக்கு) சிறு தொகைப் பணமும் வைப்பிடப்பட்டது.

கடற்பயணத்தின் போது ஒருவர் இறந்துள்ளதாகக் கனேடியத் தமிழர் பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

கனடா வந்தடைந்த ஏதிலிகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளோடு உள்ள பெண்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் என வெவ்வேறு இடங்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளும் பெண்களும் கனேடிய சிறாரின் சட்டங்களுக்கமைந்தே இவ்விடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்திருக்கின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக