16 ஆகஸ்ட், 2010

சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ரூ. 50 மில். பெறுமதியான சட்டவிரோத சிகரட்டுகள் மீட்பு

சீனாவிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 50 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகள் கைப் பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக் களத்தின் பேச்சாளர் எஸ். டி. பிரபாத் ஜயவிக்கிரம தெரிவித்தார்.

மினுவாங்கொடை பகுதியிலுள்ள பிர பல வர்த்தகரொருவரின் வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சட்ட விரோத சிகரட்டுகள் மீட்கப் பட்டுள்ளன.

கலால் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் திணைக்களத்தின் அதிகாரிகளும் பொலிஸ் போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளும் இணைந்து நீண்டகாலமாக நடத்தி வந்த தேடுதலின் விளைவாகவே நேற்று குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிகரெட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் திணக்களத்தின் பேச்சாளர் கூறினார். இதன்போது 22 இலட்சத்து 50 ஆயிரம் சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முற்றுகையின் போது குறித்த வீட்டிலிருந்த உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சீனாவிலிருந்தே மேற்படி சிகரட்டுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கைது செய்யப் பட்ட இருவரும் கலால் திணைக் களத்தின் ஆணையாளர் நாயகம் வசந்த அப்புஹாரச்சி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதும் அவர்களுக்கு டொபெக்கோ சட்டமூலத்தின் கீழ் இதற்கான தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை இதுபோன்ற தகவல்களை கலால் திணைக்களத்திற்கு பெற்றுக் கொடுப்போருக்கு பெறுமதி மிக்க பரிசில் களை வழங்க திணைக்களம் தீர்மானித் திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக