11 ஆகஸ்ட், 2010

போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை : அமெரிக்கா கோரிக்கை

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து சுயாதீனமான முறையில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டனிடம் அமெ. காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

இந்தக் கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸைச் சேர்ந்த 57 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்கள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்களின் விசாரணை நடவடிக்கைகள் காலதாமதமாக இடம்பெறுகின்றன எனவும், இலங்கை அரசின் சில தலையீடுகள் காரணமாக அதிகாரிகள் சிலர் ஆணைக்குழுவிலிருந்து விலகியுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையை மேற்கோள்காட்டி அவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக