9 ஆகஸ்ட், 2010

அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு எதிர்காலங்களில் அர்ப்பணிப்போம்-ஜனாதிபதி

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக திட்டமிட்டு செயற்படுவதுடன் கூடுதலாக அர்ப்பணிக்கவேண்டும்.அதற்காக சகலரும் கைகோர்த்து செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கும் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டம் தொடர்பில் முழுமையான கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான செயலமர் ஒன்று பேருவளையில் நடைபெற்றது.

எங்களது பயணம் எனும் தொனிப்பொருளில் நடத்தப்பட்ட செயலமர்வின் இறுதிநாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர்கள் ,பிரதியமைச்சர்கள், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற அந்த செயலமர்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் மக்கள் அதீத நம்பிக்கையை கொண்டிருக்கின்றனர். அந்த நம்பிக்கை சீர்குலைவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க கூடாது. தாய்நாட்டின் மீது அன்பு செலுத்துகின்றவர்களாக சகலரையும் சகோதரர்களாக இணைத்துக்கொள்ளவேண்டும்.

அதற்காக அரசாங்கம் மக்களுக்கு ஏற்ற செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும். செயலமர்வில் முன்வைக்கப்பட்ட யேசானைகள் மற்றும் ஆலோசனைகள் அரசாங்கத்தின் எதிர்கால செயற்றிட்டங்களில் உள்ளடக்கப்படும்.

இந்த செயற்றிட்டத்தின் மூலம் மக்கள் பிரதிநிதிகளிடத்தில் சகோதரத்துவம் ஏற்பட்டுள்ளது. அரசியல் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் முழுமையான அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஆளும் தரப்பு உறுப்பினர்களிடத்தில் நட்பை மேம்படுத்துவது நாட்டில் எதிர்கால பொருளாதார மேம்பாட்டிற்கு வழிசமைக்கும். செயலமர்வில் உலக பொருளாதார மற்றும் புதிய பொருளாதார கொள்கை, முறைமைகள், மற்றும் இலங்கைக்கு பொருத்தமான பொருளாதார கொள்கை தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக