3 ஆகஸ்ட், 2010

இலங்கை சிப்பந்திகளுடன் மற்றுமொரு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்




இலங்கை சிப்பந்திகளுடன் பனாமா நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்றை இன்று காலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்.

இந்த கப்பலில் 23 சிப்பந்திகள் கடமையாற்றியதாக சோமாலியாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட கப்பலில் இலங்கை சிப்பந்திகளுடன், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிப்பந்திகளும் கடமையாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பல் ஏதன் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருக்கையில் படகொன்னை வந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பலை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அதையடுத்தே இந்த கப்பல் கடத்தப்பட்டுள்ளதாக சோமாலியாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கடத்தப்பட்ட கப்பலுடன் தொலைபேசியில் தொடர்புக் கொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை எனவும், தொடர்ந்தும் கப்பலை மீட்;பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

17300 தொன் எடையுடைய குறித்த கப்பலில் சீமெந்து மூடைகளே காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எம்.வி சுயிஸ் எனும் கப்பலே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக