3 ஆகஸ்ட், 2010

5 மாதம் கடற்கொள்ளையர்களால் தடுப்பு : 13 இலங்கை சிப்பந்திகளும் விரைவில் விடுதலை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த ஐந்து மாதங்களாக பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள 13 இலங்கை கப்பற்சிப்பந்திகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் முதலாம் திகதி அல் நிஸார் அல் செளதி என்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இதில் இருந்த 13 இலங்கை கப்பற் சிப்பந்திகளும் மற்றும் கிஹஸை சேர்ந்த கப்பற் சிப்பந்தி ஒருவரும் கடற்கொள் ளையர்களால் பயணக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடற்கொள்ளையர்கள் கோரியிருந்த பணயப்பணத்தை செலுத்த அந்தக் கப்பலின் சொந்தக்காரர்கள் இணைக்கம் தெரிவித்துள்ளதாகவும் இதன் காரணமாக பணயக்கைதிகளாக உள்ள கப்பற் சிப்பந்திகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரியவருகிறது.

பணயப் பணமாக கோரப்பட்ட 20 மில்லியன் டொலரை வழங்க கப்பல் சொந்தக்காரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்தப் பணம் வழங்கப்பட்டதும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக