24 ஜூலை, 2010

பயங்கரவாதிகளுக்கு நிதி: கண்காணிக்க இந்தியா-அமெரிக்கா உடன்பாடு

undefined
பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயலாற்ற வகை செய்யும் இந்திய - அமெரிக்க உடன்பாட்டில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோத
புது தில்லி, ஜூலை 23: மனித சமுதாயத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதிகளுக்கு எங்கிருந்தெல்லாம் நிதி வருகிறது என்பதை கண்காணித்து, அதைத் தடுக்க இந்தியாவும், அமெரிக்காவும் வெள்ளிக்கிழமை

(ஜூலை 23) முக்கியமான உடன்பாட்டை செய்துகொண்டுள்ளன.

2009 நவம்பரில் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கா சென்றிருந்த போது பயங்கரவாதம் குறித்து அதிபர் ஒபாமாவுடன் பேச்சு நடத்தினார். அப்போது, பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து போராட உடன்பாட்டை செய்து கொள்வதென முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, தற்போது இரு நாடுகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமரும், இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளையும் கையெழுத்திட்டனர்.

தில்லியில் வெள்ளிக்கிழமை உடன்பாட்டில் கையெழுத்திட்ட பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர்.

""இந்தியா, அமெரிக்கா இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. இப்போது செய்து கொண்டுள்ள உடன்பாடு அமெரிக்காவையும், இந்தியாவையும் மேலும் நெருக்கமடையச் செய்யும். பயங்கரவாதத்துக்கு எதிராக அதிபர் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். பயங்கரவாதச் செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்களை இரு நாடுகளும் இணைந்தே ஒழித்துக்கட்டும் என்ற தகவலை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டனர்.

பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் செய்து கொண்டுள்ள இந்த உடன்பாடு பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அவை வருமாறு:

பயங்கரவாதிகளுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பதை தீவிரமாகக் கண்காணித்தல், குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தால் இணைந்து விசாரித்தல், சைபர் கிரைம் தொடர்பாக தகவலை பகிர்ந்து கொள்ளுதல், எல்லைப் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் கையாள வேண்டிய உத்திகள், புலனாய்வு நுணுக்கங்களை பகிர்ந்து கொள்ளுதல், தடயவியல் துறையில் ஒத்துழைப்பு, ரயில் பாதுகாப்பை மேம்படுத்த இணைந்து செயலாற்றல், எல்லையோரப் பாதுகாப்புப் படை, கடற்படையை வலுப்படுத்துவதில் ஒத்துழைப்பு, துறைமுகப் பாதுகாப்பை திறன்பட கையாளும் விஷயங்களை பகிர்ந்து கொள்ளுதல், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு கூட்டாகச் சிறப்புப் பயிற்சி அளித்தல், உளவுத் தகவலை பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்டவை அந்த உடன்பாட்டில் இடம்பெற்றுள்ளன.

சிறப்புவாய்ந்த இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ள இந்நாள் (ஜூலை 23) இரு நாடுகளுக்குமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். இதை நினைத்து இரு நாட்டு மக்களும் பெருமையடைய வேண்டும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமர் குறிப்பிட்டார்.

இந்த உடன்பாடு குறித்து கூறிய இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை, பயங்கரவாதம் என்பது உலக சமுதாயத்தை அச்சுறுத்தும் பொதுவான விஷயம். இதை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவும், அமெரிக்காவும் ஏற்கெனவே இணைந்து பாடுபட்டு வருகின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளுக்கு இடையே எந்த அளவுக்கு ஒத்துழைப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இந்த உடன்பாடு அமைந்துள்ளது என்றார்.

அமெரிக்கா நெருக்குதல் அளிக்கும்... மும்பை தாக்குதல் சம்பவத்துக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பிருப்பதற்கான ஆதாரங்களை அந்நாட்டிடம் இந்தியா ஏற்கெனவே அளித்துவிட்டது. எனினும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தான் தயக்கம் காட்டி வருகிறது.

இந்நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள உடன்பாடு, மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நெருக்குதல் அளிக்க வழி ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டனில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோவ்லே, மும்பை தாக்குதல் விவகாரத்தை பாகிஸ்தான் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

காமன்வெல்த் போட்டியை குலைக்க சதி?

சண்டீகர், ஜூலை 23: காமன்வெல்த் போட்டிகளை சீர்குலைக்கும் வகையில் தில்லியில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக பஞ்சாப் போலீஸக்ஷ்ர் எச்சரித்துள்ளனர்.

தில்லியில் காமன்வெல்த் போட்டிகள் அக்டோபர் 3-ம் தேதி துவங்கி 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளை சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது.

15 கிலோ ஆர்.டி.எக்ஸ். கடத்தல்: இந் நிலையில், பாகிஸ்தானை புகலிடமாகக் கொண்டு செயல்படும் "காலிஸ்தான் ஜிந்தாபாத் படை' என்ற பயங்கரவாத அமைப்பு காமன்வெல்த் போட்டிகளை சீர்குலைக்க தில்லியில் குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியிருப்பதாக பஞ்சாப் மாநில உளவுத் துறையினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஐஎஸ்ஐ ஆதரவுடன் ரஞ்சித் சிங் நீதா என்பவன் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், தில்லியில் ஊடுருவ தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்காக 15 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்துகள் பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் வழியாக தில்லி கடத்தி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றில் பெருமளவு வெடிமருந்துகளை பஞ்சாப் போலீஸக்ஷ்ர் கைப்பற்றியுள்ளனர். பெரோஸ்பூர் மாவட்டம், லோரா நவாப் கிராமத்தில் சூரத் சிங் என்பவரிடமிருந்து குறிப்பிட்ட அளவு வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானிலிருந்து 3 பகுதிகளாக தில்லிக்கு வெடிமருந்துகள் கடத்தப்படுவதாகவும், அதில் முதல் பகுதி தனக்கு அனுப்பப்பட்டதாகவும் சூரத் சிங் தெரிவித்துள்ளார்.

இதேபோல், இரண்டாம் பகுதி நவான்ஷெர் பகுதியில் உள்ள ஒருவருக்கும், மூன்றாம் பகுதி ஹரியாணா மாநிலம், சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மூன்றாம் பகுதி வெடிமருந்து மூலம், தேரா சச்சா பிரிவுத் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

4 தீவிரவாதிகள்: இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராகி வரும் பயங்கரவாதிகள் பெயர் விவரங்களையும் உளவுத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த பல்வீந்தர் சிங், பிரான்ûஸச் சேர்ந்த ஜாஸி, அமெரிக்காவைச் சேர்ந்த ராணா மற்றும் பம்மா ஆகியோர் இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர்.

இவர்கள் 4 பேரும் தில்லிக்குள் ஊடுருவ முடியாவிட்டால், காலிஸ்தான் ஜிந்தாபாத் படைத் தலைவர் ரஞ்சித் சிங் நீதாவே இந்தியாவுக்குள் ஊடுருவி, குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்தக்கூடும் என்றும் பஞ்சாப் உளவுத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக