ஆங்கில மொழியில் க.பொ.த. உயர் தரம் கற்பிப்பதற்கென 554 ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்து ள்ளது. இது தொடர்பான விண்ணப்பம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (10) சகல தேசிய பத்திரிகைகளிலும் வெளியாகுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் குணவர்தன இதுபற்றி அறிவித்தார். “வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 85 பாடசாலைகளில் உயர்தரம் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகிறது. ஆனால் ஆங்கில ஆசிரியர்கள் போதியளவு இல்லை என்று கூறுகிறார்கள்.
இந்தக் குறையை நிவர்த்திக்கும் வகையில் 554 ஆங்கில ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ள முகாமைத்துவ திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போது விஞ்ஞான பாடத்திற்கு மட்டுமே ஆங்கில ஆசிரியர்கள் உள்ளனர். வர்த்தகம், கலை பிரிவுகளுக்குப் போதிய ஆசிரியர்கள் இல்லை. ஒரு பாடத்தினைக் கற்க குறைந்தது 20 மாணவர்களாவது இருந்தால் அந்தப் பாடசாலைக்கு ஆங்கில ஆசிரியர் பெற்றுக்கொடுக்கப்படுவார் என்றும் அமைச்சர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக