7 மே, 2010

வடபகுதி மக்கள் மனங்களை வெல்வது எமது பாரிய பொறுப்பு முப்படைகளின் பங்களிப்புடன் மக்கள் நலன் பேண நடவடிக்கை





கிளிநொச்சியை வென்றது போன்று மக்கள் மனங்களை வெல்வதும் எமது பாரிய பொறுப்பாகும். முப்படை யினரின் பங்களிப்புடன் வடபகுதி மக்களின் நலன்களை பேண பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செய லாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

2009 ஜனவரி 2ஆம் திகதி கிளிநொச்சி நகரம் படையினரால் மீட்கப்பட்டதை நினைவுகூரும் முகமாக கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியை பாதுகாப்புச் செயலாளர் நேற்று (06) திறந்து வைத்தார். இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :- 30 வருடம் நீடித்த பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஒருவருடம் நிறைவடைகிறது.

பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் முக்கிய இடமாக கிளிநொச்சி நகரம் காணப்பட்டது. கிளிநொச்சி நகரை வீழ்த்த முடியாதென புலிகளும் பாதுகாப்பு ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக கூறிவந்தனர்.

ஆனால், எமது பாதுகாப்புப் படையினர் கிளிநொச்சியை மீட்டது மட்டுமன்றி புலிகளின் பிடியில் சிக்கியிருந்த அப்பாவி மக்களையும் அவர்களின் உடமைகள், உயிர்கள் என்பவற்றையும் மீட்டது மிகப் பெரும் வெற்றியாகும்.

வடபகுதி மக்களின் நலன்களை பாதுகாக்கவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் வேண்டிய பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருக்கிறது.

இந்த நிலப்பரப்பை வெற்றிகொண்டது போன்று மக்களின் மனங்களை வெல்ல வேண்டிய எமது பொறுப்பாகும்.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க மாட்டோம். இப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவத ற்காக ஒவ்வொரு பிரதேசத்திலும் இராணுவ முகாம்களை அமைக்க உள்ளோம் என்றார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்புப் படை பிரதம அதிகாரியும் விமானப் படைத் தளபதியுமான எயார்சீப் மார்சல் ரொசான் குணதிலக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய, கடற் படைத் தளபதி வைஸ்அட்மிரல் திசர சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, கிளிநொச்சி கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு, வன்னி கட்டளையிடும் தளபதி கமல் குணரத்ன உட்பட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக