5 மே, 2010

விடுவிக்கப்பட்ட சிறார்களுக்கு மட்டக்களப்பில் புனர்வாழ்வுத் திட்டம்

மட்டக்களப்பில் ஆயுதக்குழுவில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறார்களுக்கு நீதியமைச்சில் புனர்வாழ்வு திட்டம் நடைபெறுகின்றது.

ஆயுதக் குழுக்களில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறார்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சின் ஏற்பாட்டில் தற்போது அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.

நீதியமைச்சு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெப் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கமைய இந்த புனர்வாழ்வு திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 33 சிறார்கள் விடுவிக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சிறார்களுக்கு விசேட தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வருவதுடன் பயிற்சியினைப் பூர்த்தி செய்தவர்களுக்குத் தொழில் உபகரணங்கள், சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பின் உதவியில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

இந்தச் சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வுத் திட்டத்தின் முன்னேற்றங்கள் பற்றி ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று மட்டகளப்பு மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக