23 ஏப்ரல், 2010

நான்கு பிரிவுகளில் நளினிமீது வழக்குத் தாக்கல்



ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளி நளினி மீது மேலும் நான்கு குற்றங்கள் சுமத்தப்பட்டு 4 பிரிவுகள் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடரப்பட்டால், நளினிக்கு 9 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்லாம் என்று கூறப்படுகிறது.

வேலூர் பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார் நளினி. நேற்று முன்தினம் நளினியின் அறையில் ஜெயில் அதிகாரி ராஜலெட்சுமி தலைமையில் காவலர்கள் சோதனை நடத்திய போது, அவரிடமிருந்து செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை வேலூர் பாகாயம் பொலிஸ் நிலையத்தில் நளினி மீது ஜெயில் அதிகாரி ராஜலட்சுமி புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வேலூர் பாகாயம் பொலிசார், குற்ற உணர்வோடு செயல்படுதல் (இந்திய தண்டனை சட்டம் 353), குற்றத்தை மறைக்க முயன்றமை (201), அரசு ஊழியரை கடமை செய்ய விடாமல் தடுத்தல் (186), சிறைத்துறை 42ஆவது சட்டத்தின் படி தடை செய்யப்பட்ட பொருளை வைத்திருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் நளினி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த 4 பிரிவு சட்டத்தின்படி வழக்கு தொடர்ந்தால் நளினிக்கு 9 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. .

புகார் குறித்து பாகாயம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி நளினியிடம் விசாரணை நடத்துகிறார். வேலூர் ஜெயிலுக்குச் சென்று நளினியிடம் இன்று அவர் விசாரணையைத் தொடங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக