23 ஏப்ரல், 2010

கிளிநொச்சி ரயில் பாதையோரங்களில் கடைகள் அமைக்கத் தடை



கிளிநொச்சி ரயில் பாதையின் இருமருங்கிலும் கடைகள், வியாபார ஸ்தபானங்களை அமைக்க வேண்டாம் என கரைச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது.

கிளிநெச்சியில் தற்போது மீள் குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கிளிநெச்சி ரயில் பாதையில் வடக்கு – தெற்கு பக்கமாக இருமருங்கிலும் தற்போது வியாபார ஸ்தபானங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன.

வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதால், இவ்வாறு அமைக்கப்பட்டு இருக்கும் கடைகள், வியாபார ஸ்தாபனங்களால் இடையூறு ஏற்படலாம் என்பதால் இவ்வாறான அறிவுறுத்தல் ஒன்றினை வழங்குவதாக கரைச்சி பிரதேச சபைச் செயலாளர் வெ.குலேந்திரன் தெரிவுத்துள்ளார்.

அதேவேளை கிளிநொச்சி வீதியின் இருமருங்கிலும் உள்ள மரங்களை வெட்ட வேண்டாம் எனவும் கரைச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது.

கிளிநொச்சியில் தற்போது மீளக் குடியேற்றம் நடைபெற்று வருகின்றமையினால் மக்கள் தமது வீடுகளை அமைப்பதற்காக வீதிகளின் ஓரங்களிலுள்ள மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர்.

கடந்த கால யுத்தங்களினால் கிளிநொச்சிப் பிரதேசத்தில் பெருமளவான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் மரவளம் அழிந்து போவதைத் தடுக்கும் முகமாகவே இவ்வாறான அறிவித்தலை வெளியிட்டதாக கிளிநெச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக