23 ஏப்ரல், 2010

தென்னிலங்கை காதலர்களால் யாழ்.போதனா வைத்தியசாலை கண்சிகிச்சை நிலையத்தில் பதற்றம்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கண்சிகிச்சைப் பிரிவில் நேற்று இடம்பெற்ற கத்திக் குத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண்சிகிச்சைப் பகுதிக்கு தொழில்நுட்பவியலாளராக நியமனம் பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் 26 வயதுடைய கமகே என்பவர் வந்திருந்தார். அவரைச் சந்திப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரியும் 22 வயதுடைய அஞ்சலி என்பவர் வந்திருந்தார்.

காதலர்களான இருவரும் உரையாடிக் கொண்டு இருக்கையில் இருவருக்கும் இடையில் சண்டை மூண்டது. இருவரும் தம் கைகளில் வைத்திருந்த கத்தியினால் மாறி மாறி குத்திக் கொண்டனர்.

இதனால் கண்சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளர்கள் கதிகலங்கினர். கத்திக்குத்துப்பட்ட காதலர்கள் இருவரும் தற்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக