20 ஏப்ரல், 2010

நாடு திரும்ப முடியாது தவிக்கும் நம்மவருக்கு உரிய நிவாரணம்: மவிமு அரசிடம்

ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து இலங்கை வருவதற்காக காத்திருக்கும் நம் நாட்டவருக்கு உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு இன்று செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டுக்குத் திரும்ப முடியாமல் இலங்கையர்கள் பலர் ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்தும் தங்கியிருக்கிறார்கள். அவர்களிடம் போதியளவு பணவசதி இல்லாதுள்ளமை தொடர்பில் எமக்கு அறியக் கிடைத்தது.

ஏனைய நாடுகளைப் பொருத்தவரை தங்கள் நாட்டுப் பிரஜைகளுக்கு பல்வேறு வகையிலும் நிவாரணங்களை வழங்கியுள்ளன.எமது நாட்டவருக்கு நிவாரணம் வழங்கப்படாதது ஏன்? இனியும் காலம் தாமதிக்காது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக