20 ஏப்ரல், 2010

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் புதிய புகலிடக் கோரிக்கைகளை உடன் நிறுத்த அவுஸ்திரேலியா முடிவு

இலங்கையர் மற்றும் ஆப்கானியரிடமி ருந்து வரும் எந்தவிதமான புதிய புகலிடக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறுத்தி வைப்பதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் விளைவாக, இந்நாடுகளைச் சேர்ந்த புகலிடம் வேண்டுவோரின் புகலிடக் கோரிக்கைகள் மூன்றுமாத காலத்திற்கோ (இலங்கை) அல்லது ஆறுமாத காலத்திற்கோ (ஆப்கானிஸ்தான்) மதிப்பீடு செய்யப்படப் போவதில்லை. இக்காலகட்டத்துக்குப் பின், நிறுத்திவைப்பானது மறுபரிசீலனை செய்யப்படும்.

ஆள் கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களுக்கு பணஉதவி செய்பவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க அவுஸ்திரேலிய அரசு கூடுதல் முயற்சிகள் எடுத்து வருகின்றது.

இந்த நிறுத்திவைப்பானது இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானில் உருவாக்கி வரும் சூழ்நிலைகளின் விழைவாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிறுத்திவைப்பு மற்றும் இவ்விரு நாடுகளில் மாறிடும் சூழ்நிலைகள் ஆகியவைகளின் இணைந்த தாக்கத்தால், எதிர்காலத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானி லிருந்து அதிகமான புகலிடக் கோரிக்கைகள் மறுக்கப்படும் வாய்ப்புகள் அதிகரிக்குமென அவுஸ்திரேலிய அரசு எதிர்பார்க்கின்றது.

ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடிமக்களை மீள்குடியமர்த்தல் மற்றும் அந்தச் சமுதாயத்தினருக்கு மறுவாழ்வு தருதல் போன்ற பெரும்பணியைக் கையாண்டு இலங்கை அடைந்து வரும் முன்னேற்றத்தை அவுஸ்தி ரேலியா அங்கீகரிக்கிறது. மேலும் ஸ்திரமான நிலை ஏற்படுவதற்கு இது ஒரு சந்தர்ப்பம். இதன் மூலம் இலங்கையர்கள் அனைவரும் தமது நாட்டில் சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதனை உணர்வர்.

ஆள் கடத்தலை அடியோடி ஒழிக்க இலங்கை அதிகாரிகள் செய்துவரும் பணியோடு இணைந்து, இந்தக் கொள்கை மாற்றமும் ஒரு தெளிவான செய்தியைத் தெரிவிக்கின்றது.

இந்த ஆள் கடத்தல்காரர்களைப் பயன்படுத்துவோர் தங்களின் உயிரையும், பணத்தையும் பணயம் வைக்கின்றனர்.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் வேண்டுகின்ற ஆப்கான் குடிமக்களுக்கும் இந்த மாற்றங்கள் செல்லுபடியாகும். அவர்களில் பலர் இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளின் வழியாக அவுஸ்திரேலிய நாட்டிற்குள் நுழைகிறார்கள்.

அத்துடன் ஒத்த நடவடிக்கையாக, அவுஸ்திரேலியா அதன் ஆள் கடத்தல் தடுப்புச் சட்டங்களைப் பலப்படுத்தி அவுஸ்திரேலியாவுக்குள் ஆள் கடத்தும் குற்றத்துக்குப் பண உதவி வழங்கு வதோ அல்லது வேறுவித ஆதரவு தெரிவிப்பதோடு சட்டவிரோதச் செயல் என அறிவிக்கும்.

இந்த வட்டாரத்தில் கூட்டு நாடுகளுடன் நெருக்கமாகச் செயல்படுவதன் மூலம், ஆள் கடத்தல்காரர்கள் பிடிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்படுவார்கள் என்று உறுதியான செய்தியை அனுப்புவதில் அவுஸ்திரேலியா உறுதியாக உள்ளது.

ஆள் கடத்தலைத் தடுப்பதற்கு இருபது வருடங்கள் வரை தண்டனை கொடுக்கும் வகையில் புதிய சட்டங்கள் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அறிமுகப்படு த்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக