20 ஏப்ரல், 2010

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் மீள்வாக்குப்பதிவை குழப்ப முயற்சி தேர்தல் ஆணையாளரிடம் ஐ. ம. சு. மு. முறைப்பாடு





தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சியொன்று மீள் வாக்களிப்பின் போது குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டி ருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் ஆணையாளரிடம் 19.4 .2010 முறைப்பாடு செய்துள்ளது.

மீள் தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு ஐ. ம. சு. முன்னணி முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரதிநிதிகள் தேர்தல் ஆணையா ளரிடம் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

ஐ. ம. சு. முன்னணி பிரதிநிதிகள் .19 .04 .2010 காலை தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவை தேர்தல் திணைக்களத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் மைத்திரிபால சிரிசேன, ஐ. ம. சு. மு. செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த், சு. க. சிரேஷ்ட பிரதித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, சு. க. பொருளாளர் டளஸ் அலஹப்பெரும ஆகியோர் கலந்து கொண்டனர். நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டிய பகுதிகளிலுள்ள 38 வாக்களிப்பு நிலையங்களில் நடத்தப்பட வுள்ள மீள் வாக்களிப்பு குறித்து இச்சந்திப் பின் போது முக்கியமாக ஆராயப்பட்டது.

அமைதியை நிலை நாட்டுவதற்காக ஜனாதிபதி இராணுவத்தினரையும் பொலிஸாரையும் ஈடுபடுத்தியுள்ளதோடு தேவையாக உத்தரவுகளையும் வழங்கியுள்ளதாக ஐ. ம. சு. மு. பிரதிநிதிகள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர்கள் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் செயற்பட மாட்டார்கள் என நம்பிக்கை வெளியிட்ட ஐ. ம. சு. முன்னணி பிரதி நிதிகள், தேர்தல் சட்டங்களை ஒழுங்காக நிறைவேற்றுமாறு கண்டி மாவட்ட ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர் களுக்கு ஜனாதிபதி பணித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஒரு அரசியல் கட்சி, வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வன்முறையை தூண்டிவிட திட்டமிட்டுள்ளதாக ஐ. ம. சு. பிரதிநிதிகள் ஆணையாளருக்கு அறிவித்தனர். தேர்தல் செயலக பிரதிநிதிகளுக்கு இது குறித்து அறிவூட்டி அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரினர்.

38 வாக்களிப்பு நிலையங்களில் மீள் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளர் எடுத்த முடிவு தொடர்பில் அந்தப் பிரதேச ஐ. ம. சு. முன்னணி பிரதிநிதிகள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் ஐ. ம. சு. முன்னணி ஆணை யாளரின் முடிவை ஏற்றுக் கொள்கிறது. ஐ. ம. சு. முன்னணிக்குக் கிடைத்த பெரு வெற்றியை இந்த நடவடிக்கை மூலம் பாதுகாக்க முடிவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக