தமிழீழ மக்கள் விடுதலை கழகம்
தேர்தல் சம்பந்தமாக தமிழ்க் கட்சிகளிடையே ஒரு ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற ரீதியில் நாங்கள் பல தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இருந்தாலும் இந்த கூட்டுச் சம்பந்தமான பேச்சுக்களை அடிப்படையிலேயே தேர்தலை நோக்கியதாகவே அனைத்துக் கட்சிகளும் பார்க்கின்றன. தத்தமது கட்சிக்கு கூடுதலான வேட்பாளர் பங்கீடு மற்றும் தத்தமது கட்சியின் வெற்றியை உறுதி செய்யக்கூடிய வகையிலான கூட்டுக்கள் அமைவதிலுமே அனைத்துக் கட்சிகளும் முனைப்புக் காட்டி வருகின்றன. அனைத்து கட்சிகளும் தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி கூறி வருகின்றபோதிலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த கூட்டமைப்பு முயற்சிகள் நடைபெறவில்லை. இருந்தாலும் தமிழ் கட்சிகள் கூடியளவுக்கு ஒன்றுபட்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதையே நாங்களும் முழுமையாக விரும்புகிறோம். இதனடிப்படையில் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடாத்துகின்றோம். ஆனால் எப்படியிருந்தபோதிலும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக தேர்தலுக்கு முகம்கொடுக்கக்கூடிய வாய்ப்பு குறைவாகவே காணப்படுகின்றது. ஆகவே தமிழ்த் தரப்பு இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாக நின்று தேர்தலை முகங்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன. இப்படி நடந்தாலும் தேர்தலுக்குப் பிறகாவது இந்தக் கட்சிகளிடையே தமிழ் மக்களுடைய தீர்வு சம்பந்தமானவும், அடிப்படைப் பிரச்சினை சம்பந்தமானதும் ஆன தீர்வுகளுக்கு ஒரு புரிந்துணர்வு உருவாக்கப்பட வேண்டும். தேர்தலுக்குப் பிறகாவது இந்தக் கட்சிகள் மத்தியிலே ஒரு தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று தமிழ் மக்களுடைய பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒற்றுமையாக செயற்படக்கூடிய ஒரு நிலைமை உருவாக்கப்படவேண்டும். இந்தத் தேர்தலிலே நாங்கள் எங்களால் இயன்றளவு விட்டுக் கொடுப்புக்களை கொடுத்து மற்றும் ஒத்துக் கொள்ளக்கூடிய கட்சிகளுடன் கூட்டமைப்பொன்றை அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றோம். சாத்தியமான கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுப்போம்.
த.சித்தார்த்தன்
தலைவர்
தமிழீழ மக்கள் விடுதலை கழகம்புளொட்)
த.சித்தார்த்தன்
தலைவர்
தமிழீழ மக்கள் விடுதலை கழகம்புளொட்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக