21 பிப்ரவரி, 2010

பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதுடன்




வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் பாரிய அபிவிருத்தியை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இம்முறை அமைச்சரவையை சிறியதாக்கும் அதேவேளை, இளைஞர்களுக்கு முன்னுரிமையளிப்பதும் தமது எதிர்பார்ப்பாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நாட்டில் அரசியல்செய்ய எவருக்கும் உரிமையுண்டு. தனிப்பட்டவர்களைப் பாதிப்படையச் செய்ய நாம் தயாரில்லை. அவ்வாறு அரசியல் நடத்தவும் முடியாது. எவரும் அரசியல் நடத்தும் சுதந்திரம் இந்நாட்டில் உள்ளது என்பதை மக்கள் அறிவர் எனவும் ஜனாதிபதி பண்டாரவளையில் நடைபெற்ற சுதந்திரக்கட்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

 

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எதிர்வரும் மார்ச் 1ம்திகதி முதல் நீதித்துறை செயற்பாடுகள்



கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எதிர்வரும் மார்ச் 1ம்திகதி முதல் நீதித்துறை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 1987ம் ஆண்டுமுதல் இந்தப் பகுதிகளில் புலிகளின் நீதித்துறை செயற்பாடுகளே இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் மேமாதம் புலிகள் யுத்தத்தால் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்ட பின்னர் அவர்களின் நீதித்துறை செயற்பாடுகளும் முற்றாக செயலிழந்தன. இந்நிலையில் தற்போது அரசாங்கம் குறித்த பகுதிகளுக்கான நீதித்துறை செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வட மாகாணத்திலும் போட்டியிடவிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவித்துள்ளது

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வட மாகாணத்திலும் போட்டியிடவிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவித்துள்ளது. வடக்கில் போட்டியிடும் பிரதான கட்சியுடன் நேரடிப் போட்டியில் இறங்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாண முதல்வர் சி.சந்திரகாந்தன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தமது வேட்புமனுப் பத்திரத்தைக் கையளிக்கவுள்ளார். தேர்தல் ஒன்றில் முதன்முறையாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாணத்திற் வெளியில் போட்டியிடவுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி படகுச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய முன்னணியில் இiணைந்துள்ள கூட்டுக் கட்சிகளுள் ஒன்றான ஜனநாயக மக்கள் முன்னணி


 

ஐக்கிய தேசிய முன்னணியில் இiணைந்துள்ள கூட்டுக் கட்சிகளுள் ஒன்றான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் வேட்பாளர்கள் மூவர் ஐ.தே.கட்சியில் போட்டியிடவுள்ளனர் என்றும் ஒருவர் தமது சகோதரர் பிரபா கணேசன் என்றும் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை நுவரெலியா, மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் தலா இரண்டு வேட்பாளர்களையும், கண்டி, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு வேட்பாளரையும் நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


16வது சார்க் மாநாட்டிற்கான அழைப்பிதழை நேபாள  


16வது சார்க் மாநாட்டிற்கான அழைப்பிதழை நேபாள வெளிவிவகார அமைச்சர் லியொன்போ உகென் ரெஷெரிங் அலரிமாளிகையில் வைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளார். அதேவேளை பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் பியோ மரியானியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலர் ரொமேஷ் விஜயசிங்க ஆகியோரும் கலந்து கெர்ணடிருந்தனர்.


மட்டக்களப்பு வெல்லாவெளி திக்கோடைப் பிரதேசத்தில் புதையல்

மட்டக்களப்பு வெல்லாவெளி திக்கோடைப் பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட சிலர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். புராதன இந்துக் கோயில் ஒன்று அருகாமையிலுள்ள இடிபாடுகளுக்கு மத்தியிலேயே இவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 1.30மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது ஐந்துபேர் வரை பிரதேசத்திலுள்ள காவலரனில் இருந்த படையினரால் கைதுசெய்யப்பட்டு பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச கிராமவாசியொருவர் வழங்கிய தகவலையடுத்தே இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு கிரான் பிரதேச திகிலிவட்டைப் பிரதேசத்தில் வீதியோரத்தில் குளித்துக் கொண்டிந்த 03 படையினர் 12.02.2010அன்று வீதியால் சென்று கொண்டிருந்த 9வயது சிறுமியை துரத்திப்படித்து பாலியல்
 



மட்டக்களப்பு கிரான் பிரதேச திகிலிவட்டைப் பிரதேசத்தில் வீதியோரத்தில் குளித்துக் கொண்டிந்த 03 படையினர் 12.02.2010அன்று வீதியால் சென்று கொண்டிருந்த 9வயது சிறுமியை துரத்திப்படித்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதுடன், இச்சம்பவத்தை வெளியில் கொண்டுவந்த அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான ச.சுகபாலன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். மாணவி மயக்கமுற்ற நிலையில் வீடுசென்ற நிலையில் முதலில் பெற்றோரினால் மாவடிவேம்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், பின் செவ்வாய்க்கிழமைவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இச்சம்பவம் தொடர்பாக 04 படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்திய அறிக்கையில் பாலியல் துஸ்பிரயோகம் இடம்பெற்றுள்ளமை நிருபிக்கப்பட்டுள்ளது. ச்சம்பவம் வெளிக் கொணரப்பட்டுள்ளதால் பிரதேச மக்களை படையினர் அச்சுறுத்தி வருவதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக