21 பிப்ரவரி, 2010

16 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மூழ்கிய கப்பலில் தவித்த 60 மாணவர்கள் மீட்பு
-

கனடாவை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 60 பேர் கொண்ட குழுவினர் உலகை சுற்றி வர ஒரு கப்பலில் புறப்பட்டனர். 5 மாதங்களில் தங்கள் பயணத்தை தொடர அவர்கள் முடிவு செய்திருந்தனர்.

அவர்கள் பயணம் செய்த கப்பல் கடந்த வியாழக்கிழமை பிரேசில் நாட்டு கடலுக்கு வந்தது. அப்போது திடீரென தண்ணீரில் மூழ்க தொடங்கியது.

இது குறித்து பிரேசில் நாட்டு கப்பற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவர்கள் அந்த வழியாக வந்த சரக்கு கப்பலுக்கு தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்தக்கப்பல் மீட்பு பணிக்காக விரைந்து சென்றது.

கப்பற்படை கப்பலும் விரைந்தது. இதற்கிடையே கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கியபடியே இருந்தது. இதனால் அதில் பயணம் செய்த மாணவர்கள் பயத்தில் உறைந்து போயிருந்தனர்.

இந்த நிலையில் 16 மணி நேர போராட்டத்துக்கு பின் மூழ்கிய கப்பலில் இருந்த 60 மாணவர்களும், மாலுமிகள் உள்ளிட்ட 4 சிப்பந்திகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பாக பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக