19 பிப்ரவரி, 2010

இன்றுமுதல் ஏப்ரல் 15 வரை அரசியல் பேரணிகள் நடத்தத் தடை :



பொலிஸார்
பொதுத்தோ்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் இன்றைய தினம் முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரையில் அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களோ அல்லது பேரணிகளையோ நடத்தக் கூடாது எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வது தொடர்பிலும் சில விதிமுறைகளை வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டுமென பிரதிக் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் போது குறித்த வேட்பாளரும், அவரது உதவியாளரும் மட்டுமே பிரசன்னமாக முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையற்ற முரண்பாடுகள் மற்றும் மோதல்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்றே நாடாளுமன்றத் தேர்தலையும் அமைதியான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் நபர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினரும் தகவல்களைத் திரட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக