19 பிப்ரவரி, 2010

ஜே.வி.பி காரியாலயம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு?





அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயம் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இன்று முற்பகல் பொலிஸார் காரியாலயத்தைச் சுற்றி வளைத்தனர்.

எனினும் நீதிமன்ற அனுமதியின்றி சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் நீதிமன்ற அனுமதியைப் பெற பொலிஸார் திரும்பிச் சென்றுள்ளனர்.

எனினும் அங்கு பெருந்தொகையான பொலிஸார் இருப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன


புத்தளத்தில் இரு சுயேட்சைக் கட்சிகள் இன்று வேட்பு மனுத் தாக்கல்



எதிர்வரும் ஏப்ரல் மாதம் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் இரண்டு சுயேட்சைக் கட்சிகள் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஏழாவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் 4 லட்சத்து 95ஆயிரத்து 575 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது



ஆசிரியர் பயிற்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் நாளை ஆரம்பம்



இலங்கை அரச பாடசாலைகளில் கற்பிக்கும் பயிற்றப்படாத, பட்டதாரியல்லாத சகல ஆசிரியர்களையும் பயிற்றுவிக்கும் திட்டம் நாளை 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விப் பிரிவும் தேசிய கல்வி நிறுவகத்தின் நிறுவன அபிவிருத்திப் பிரிவும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

நாடளாவிய ரீதியில் 42 மத்திய நிலையங்களில், வார இறுதி நாட்களில் இப்பயிற்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் மொழி மூலம் 18 மத்திய நிலையங்களும் சிங்கள மொழி மூலம் 17 மத்திய நிலையங்களும் ஆங்கில மொழி மூலம் 7 மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

இவற்றில் கடமைபுரிய பகுதி நேர அடிப்படையில் வருகை தரும் விரவுரையாளர்களாக சுமார் 200 பேர் வரை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கமர்த்தப் படவுள்ளனர்.

இப்பாடநெறி இரு வருடங்களைக் கொண்டது. முதலாம் வருடம் அளவீடும் மதிப்பீடும், கல்வி உளவியல், வகுப்பறை முகாமைத்துவம் முதலான பாடப் பரப்புகளைக் கொண்டிருக்கும்.

கடந்த வருடம் அரச பாடசாலைகளுக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய பெருந்தோட்டப் பகுதி பாடசாலை ஆசிரியர்கள் இப்பயிற்சி மூலம் நன்மையடையவுள்ளனர். அத்தோடு, அண்மையில் நியமனம் பெற்ற ஆசிரிய உதவியாளர்களும் இதன் மூலம் நன்மையடையவுள்ளனர்




செய்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ






தொடர்பான கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தற்போது இந்திய அதிகாரிகள் பலரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆகியோரை கோத்தபாய நேற்று சந்திக்க இருந்ததாக இவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா நடத்தும், ஆசியாவிலேயே மிகப்பெரியது என்று கூறப்படும் பாதுபாப்பு ஆயுத கண்காட்சியான 'டி/பெக்ஸ்போ இந்தியா 2010' கண்காட்சியில் கலந்து கொள்ளும் கோத்தபாய, இந்திய அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்த பின்னர் இன்று நாடு திரும்புகிறார்.

எவ்வாறாயினும் இவர் இந்திய அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. மேற்படி பேச்சுவார்த்தைகளின் போது அங்குள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசமும் சமுகமளிக்கிறார்.

கோத்தபாயவை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் ஏற்கனவே வெளியிட்ட செய்திகளில், 5 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள கோத்தபாய போதி காயாவுக்கும் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.


ஏழாவது நாடாளுமன்றத் தேர்தல் : வேட்பு மனுத் தாக்கல் இன்று ஆரம்பம்





நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 22 மாவட்டங்களிலுமுள்ள மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களில் இன்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் ஆரம்பமாகின்றது. இது எதிர்வரும் 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் நாடு பூராவும் மாவட்ட ரீதியாக 196 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் ரீதியாக 29 உறுப்பினர்களும் என மொத்தமாக 225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றனர்.

இவர்களைத் தெரிவு செய்வதற்கு 22 மாவட்டங்களிலுமுள்ள 160 தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 14, 099, 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 1, 521, 854 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 1, 474,464 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 813, 233 பேரும், கண்டி மாவட்டத்தில் 970, 456 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 342, 684 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 457, 137 ÷பரும், காலி மாவட்டத்தில் 761, 815 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 578, 858 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 421, 186 பேரும்,-

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 721, 359 பேரும், வன்னி மாவட்டத்தில் 266, 975 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 333, 664 பேரும், திகாமடுல்ல மாவட்டத்தில் 420, 835 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 241, 133 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 1, 183, 649 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 495, 575 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 579, 261 பேரும், பொலனறுவை மாவட்டத்தில் 280, 337 பேரும்,-

பதுளை மாவட்டத்தில் 574, 814 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 300, 642 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 734, 651 பேரும், கேகாலை மாவட்டத்தில் 613, 938 பேரும் இவ்வாறு வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்பேரில் ஆறாவது நாடாளுமன்றம் கடந்த 9 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.




இராணுவ நீதிமன்றில் அநீதி இழைக்கப்படின் சரத் மேன்முறையீடு செய்யலாம் : அரசாங்கம்




அமுல்படுத்தவிடாமல் நாடொன்று தடுக்குமாயின் அந்த நாட்டில் சட்டமிருக்காது. இது சட்டத்திற்கும் சுயாதிபத்தியத்திற்கும் முரணானதாகும். ஜெனரல் சரத் பொன்சேகா மீதான விசாரணை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் சட்டத்திற்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவ நீதிமன்றத்தில் தனக்கு அநீதி இழைக்கப்படுமாயின் அவர் மேன்முறையீடு செய்யலாம் என்று அமைச்சரவை பேச்சாளர்களில் ஒருவரும் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

வங்கி பெட்டகங்களிலிருந்து மீட்கப்பட்ட பணம் தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கள்ளப் பணத்தை நாட்டின் பொருளாதரத்திற்குள் இணைப்பது சட்டத்தின் பிரகாரம் அவதூறுக்குரிய தவறாகும். அதேபோன்று, இலங்கையில் ஒருவர் 2000 டொலர்களை மட்டுமே தம்வசம் வைத்திருக்கமுடியும் என்றும் அவர் சொன்னார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

"முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதான வழங்கு தொடர்பில் மக்கள் தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். பொன்சேகாவின் மருமகனின் தயாரின் வங்கி பெட்டகங்கள் நான்கிலிருந்து 750 லட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளது. பொறுப்புள்ள அரசாங்கத்தினால் இது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க முடியாது. சட்டத்தை நடைமுறைப்படுத்தாமலும் இருக்கமுடியாது.

நடவடிக்கைகளை எடுக்கவேண்டாம், சட்டரீதியில் செயற்படவேண்டாம் என யாராவது யோசனைகளை முன்வைக்க முடியுமா? ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற இரண்டு நாட்களுக்கு பின்னரே அந்த பணம் வங்கி பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளது.

நான்கு பெட்டகங்களில் பணம்

இந்தப் பணம் தன்னுடையதல்ல என்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் காரியாலயத்திலிருந்தே கொண்டுவரப்பட்டதாகவும் ஜெனரலின் மகளே இந்தப் பணத்தைப் பெட்டகங்களில் வைக்குமாறு கோரியாதாக தனுனவின் தயார் தெரிவித்துள்ளார். பணத்தை வைப்பதற்கு பெரிய பெட்டகம் இன்மையினால் நான்கு பெட்டகங்களில் பணம் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெட்டகங்கள் தனுனவின் தாயாரது பெயரிலும் ஏனைய இரண்டு பெட்டகங்கள் அவருக்கு நெருங்கிய மிகவும் நம்பிக்கையான நண்பர்களின் பெயர்களிலும் இருந்தன. அந்த நான்கு பெட்டகங்களின் திறப்புகளும் தனுனவின் தாயாரான அசோகா திலகரத்னவிடமே இருந்தன.

குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரது வங்கி பெட்டகங்களைக் கடந்த 15 ஆம் திகதி திறந்த போது, அங்கு வங்கி அதிகாரிகள், தனுனவின் தாயாரான அசோகா திலகரத்ன, அவரின் சட்டத்தரணிகள் இருந்தனர். நான்கு பெட்டகங்களிலும் மூன்று நாடுகளின் நாணயங்கள் இருந்தன.

நான்கு பெட்டகளிலிருந்தும் 750 லட்சம் ரூபா மீட்கப்பட்டன. அதில் 5லட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க டொலர்களும், 150 லட்சம் பவுன்களும் இலங்கை ரூபாக்களும் அடங்குகின்றன. இந்தச் செயற்பாடு, வெளிநாட்டு நாணயங்களை நிர்வகிக்கும் சட்டமூலத்தை முழுமையாக மீறுகின்ற செயற்பாடாகும்.

நகைகள், தங்கம் மற்றும் கோவைகளை வைத்திருக்க வேண்டிய வங்கிப் பெட்டங்களில் பணத்தை வைத்திருந்தமை ஏன்? அந்தப் பணத்தை நடைமுறை கணக்கிலோ அல்லது நிலையான கணக்கிலோ வைப்பிலிடாததேன்?

ஒருவர் 2000 டொலர் மட்டுமே....

சட்டத்தின் பிரகாரம் இலங்கையில் ஒருவர் 2000 டொலர்களை மட்டுமே வைத்திருக்கமுடியும். வெளிநாட்டில் தொழில் புரியும் ஒருவர் 15 ஆயிரம் டொலர்களுக்கு மேல் நாட்டுக்குள் கொண்டு வருவராயின் அவர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் அறிவிக்கவேண்டும். அதுவும் அந்தப் பணத்தை 90 நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும் அதற்குப் பின்னர் இலங்கை பண பெறுமதிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

கைப்பற்றப்பட்ட டொலர்களில் இலக்கங்கள் ஒழுங்கு முறையில் இருக்கின்றன. அந்த பணம் எங்கிருந்து, எந்த நிதியத்திலிருந்து வந்தது என்ற கேள்விகள் எழுகின்றன. கள்ள நோட்டாயின் அதனை நாட்டில் பொருளாதார சக்கரத்திற்குள் இணைக்க முயற்சிப்பது அவதூறு தவறாகும்.

இவைத்தொடர்பில் நீதிமன்றம் செல்லமுடியாது; விவாதிக்க முடியாது என்று யாராலும் கூறமுடியாது. 'ஐகோப்' பிரச்சினை மிகவும் அபாயகரமானவை. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையைச் சமர்ப்பித்து நீதிமன்றத்திற்கு தெளிவுப்படுத்தியுள்ளோம். சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அதனைத் தவறென்று யாருமே கூறமுடியாது.

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆரம்பக்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்குப் பின்னரே விசாரணையை இராணுவ நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.

இது சட்டத்திற்கு முரணானதல்ல, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் சட்டத்திற்கு அமைவாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இராணுவ நீதிமன்றத்தில் தனக்கு அநீதி இழைக்கப்படுமாயின் அவர் மேன்முறையீடு செய்யலாம். இராணுவ நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கண்காணிக்கப்படுகின்றது. மேன் முறையீட்டு நீதிமன்றத்திற்குப் பின்னர் உயர்நீதிமன்றத்தை நாடலாம். சட்டத்தை அமுல்படுத்தவிடாமல் நாடொன்று தடுக்குமாயின், அந்த நாட்டில் சட்டமிருக்காது. இவை யாவும் சட்டத்திற்கும் சுயாதிபத்தியத்திற்கும் முரணானதாகும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக