19 பிப்ரவரி, 2010

பாகிஸ்தானில் பனிச்சரிவு : ஒரு கிராமமே புதைந்து இதுவரை 60 பேர் பலி!






குண்டுகள் தான் தினம் வெடித்து மக்களை கொன்று குவித்து வருகின்றதென்றால், இப்போது பனிச்சரிவும் அவர்களை விட்டு வைக்கவில்லை போலும்.

பாகிஸ்தானின் கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள காண்டியா பள்ளத்தாக்கு பனி பிரதேசம் நிறைந்த பகுதி. அங்கு பனி மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது பஹாரோ கிராமம்.

அங்கு நேற்று திடீரென பனிப்பாறைகளில் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்தக் கிராமமே பூமிக்குள் புதைந்தது. அங்கிருந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போயின.

சாலைகளும் சேதம் அடைந்தன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

பனிப்பாறை மற்றும் மண் சரிவுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. அங்கு கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகள் தாமதமாகவே நடக்கின்றன.

பெஷாவரில் இருந்து உணவு பொருட்களுடன் சென்ற ஹெலிகொப்டரால் அங்கு தரை இறங்க முடியவில்லை. எனவே நிவாரணப் பணிகளும் மந்த கதியிலேயே நடந்து வருகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக