2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 56சதவீத பெண்கள் தகுதிபெற்றிருந்தனர்.
2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 56சதவீத பெண்கள் தகுதிபெற்றிருந்தனர். எனினும் அந்தத் தேர்தலில் 6.6சதவீதமான பெண்களே போட்டியிட்டிருந்தனர் என பெண்கள் மற்றும் ஊடகத் தகவல்மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பெண்களின் சனத்தொகை 52சத வீதமாக உள்ளபோதிலும் 225நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11ஆசனங்களே பெண்களுக்கு கிடைத்ததாகவும் தகவல்மையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் 30சதவீத வேட்பாளர் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்று பெண்கள் மற்றும் ஊடகத் தகவல் மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் ஏற்கப்படுவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2008ம் ஆண்டைய வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கே இம்முறை தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பம்செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை தேர்தலில் கூடுதலான அரசாங்க ஊழியர்களை தேர்தல் கடமையில் ஈடுபடுத்த தேர்தல் திணைக்களம் முடிவுசெய்துள்ளது. இதன்படி 2008ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பு சகல அரச நிறுவனங்களிலும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. தபால்மூலம் வாக்களிக்க 22ம் திகதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தா ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தா ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சி கொள்கைகளுக்கு முரணானவகையில் தனித்து சுயாதீனமாக சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி கோட்பாடுகளுக்கு முரண்பட்ட வகையில் செயற்பட்ட காரணத்தினால் குறித்த இரண்டு பேரையும் விலக்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. குறித்த இருவரும் இடதுசாரி விடுதலை முன்னணி கடசியில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையிலிருந்து குழந்தையொன்றை கடத்திச் செல்வதற்கு முற்பட்டமைக்காக மூவருக்கு நெதர்லாந்தில் சிறைத்தண்டனை
இலங்கையிலிருந்து குழந்தையொன்றை கடத்திச் செல்வதற்கு முற்பட்டமைக்காக மூவருக்கு நெதர்லாந்தில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் போலி ஆவணங்களைத் தயாரித்து இக்குழந்தையை கடத்திவர முற்பட்டதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இதில் முக்கிய பிரதிவாதியான பெண்ணுக்கு 189நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றுமொருவருக்கு 134நாள் சிறைத்தண்டனையும், மேற்படி இருவருக்கும் போலி ஆவணங்களை தயாரித்து வழங்கிய இன்னொருவருக்கு 06நாள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வேண்டுகோளின்பேரில் மாத்தறை மக்களுக்கு சேவையாற்ற அரசியலில் காலடி
ஜனாதிபதியின் வேண்டுகோளின்பேரில் மாத்தறை மக்களுக்கு சேவையாற்ற அரசியலில் காலடி எடுத்துவைத்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சனத் ஜயசூரிய மாத்தறையில் பிரசித்திபெற்ற மகாபோதி விகாரையில் இன்று முற்பகல் மதவழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தாது மாத்தறை மக்களின் நன்மைக்காக பாடுபடுவேன். நாட்டுக்காக விளையாடுவதிலும் சேவை செய்வதிலும் மகிழ்வடைகிறேன் என அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார். சனத் ஜயசூரியவை பெருமளவிலான மக்கள் திரண்டு வரவேற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஜெனரல் சரத்
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் 11பேர் உள்ளிட்ட 14 பேர் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்டோரில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் களுத்துறை மாவட்ட தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவரும் சிவிலியன்கள் இருவரும் அடங்குவர். குற்றப்புலனாய்புப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலங்களில் எதுவித குற்றங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பிணைகளிலன்றி முழுமையான விடுதலைக்கு உத்தரவிடுவதாகவும் நீதவான் சம்பா ஜானகி அறிவித்துள்ளார்.
வடபகுதியில் நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்
வடபகுதியில் நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்குடன் அவுஸ்திரேலியா அரசு சுமார் 250மில்லியன் ரூபா பெறுமதியான மிதிவெடிகளை அகற்றும் 5தன்னியக்க இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஸ்லோவேக்கியா நாட்டுத் தயாரிப்பான பொஸேனா 4ரக ஐந்து இயந்திரங்களும் நேற்று தேசநிர்மாண அமைச்சின் செயலாளரிடம் அவுஸ்திரேலியா தூதுவர் கையளித்துள்ளார். கொழும்பு காலிமுகத் திடலுக்கு முன்னால் அமைந்துள்ள அமரர் பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கருகே கையளிப்பு வைபவம் நடைபெற்றது. மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் பூனே உட்பட. ஐ.நா.வின் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட, அவுஸ்திரேலிய தூதரகத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
ஜெனரல் சரத்பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதிலும் 10லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கை
ஜெனரல் சரத்பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதிலும் 10லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்வின் தலைமையில் இந்நிகழ்வு கேம்பிட்ஜ் ரெரஸில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. , சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, சிறீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள்பிரிவு, இடதுசாரி முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, புதிய சிஹல உறுமய, மற்றும் பெருந்தோட்டத் துறையை பிரதிநிதித்துவப்படுத்துகிற தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள் அமைப்பு, ஜனநாயகக் குழுக்கள் ஆகிய அமைப்புகள் ஊடாக இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கிளிநொச்சியிலிருந்து மாங்குளம் மற்றும் ஒட்டிசுட்டான் ஆகிய
கிளிநொச்சியிலிருந்து மாங்குளம் மற்றும் ஒட்டிசுட்டான் ஆகிய நகரங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த பஸ்சேவைகள் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி வவுனியாவிலிருந்து மாங்குளம் ஊடாக ஒட்டிசுட்டானுக்கு இரண்டு பஸ் வண்டிகளும், கிளிநொச்சியிலிருந்து மாங்குளம் ஊடக ஒட்டிசுட்டானுக்கு இரு பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. மேலும் இந்த நகரங்களுக்கிடையிலான போக்குவரத்துச் சேவையில் வவுனியா போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளே ஈடுபடவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 7லட்சத்து 21ஆயிரத்து 359பேர் 11 தொகுதிகளில் வாக்களிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 7லட்சத்து 21ஆயிரத்து 359பேர் 11 தொகுதிகளில் வாக்களிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக