18 பிப்ரவரி, 2010





ரூ. 14 கோடி பெறுமதியான 28 கிலோ ஹெரோயின் முந்தலில் மீட்பு



பயணப் பொதி ஒன்றில் ஒவ்வொரு கிலோவாக பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 28 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை கற்பிட்டி பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர். இதன் பெறுமதி 14 கோடி ரூபா என மதிக்கப்பட்டு ள்ளது. ஹெரோயின் போதைப் பொருளை அருகில் வைத்திருந்தார் எனக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். முந்தல் அக்கரவெளி பகுதி வீடொன்றில் இருந்தே 28 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற் றியுள்ளனர்.

சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒவ்வொரு கிலோ வாக பாதுகாப்பான முறையில் பொதிசெய்ய ப்பட்டு பயணப் பொதி ஒன்றில் வைத்து கொண்டு செல்லவுள்ளதாக கற்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரிலேயே விசேட பொலிஸ் குழுக்கள் இச்சுற்றி வளைப்பை மேற்கொண்டன.





யாழ்தேவிபீ ஊடாக வடக்கும் தெற்கும் உறவை புதுப்பிப்பதை காண்பதே நோக்கம்




பிதெற்கின் தோழன்பீ நிதி அன்பளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி

வட மற்றும் தென் பகுதி மக்கள் தமக்கிடையிலான பழைய தொடர்புகளை யாழ்தேவி ஊடாக மீண்டும் புதுப்பித்துக் கொள்வதை காண்பதே தமது நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

பிதெற்கின் தோழன்பீ நிதியத்துக்காக அரச மற்றும் தனியார் அமைப்புகள் மற்றும் சங்கங்கள் ஜனாதிபதியிடம் நிதி அன்பளிப்புகளை கையளித்த நிகழ்வு நேற்று (18) அலரி மாளிகையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:- பிதெற்கின் தோழன்பீ நிதியம் பெளதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கு மட்டும் ஆரம்பிக்கப்படவில்லை வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்குமாகும்.

பிதெற்கின் தோழன்பீ நிதியத்துக்காக தனிப்பட்ட மட்டத்தில் கொடுக்கப்படும் நிதி அன்பளிப்புகளை விட பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்க மட்டத்தில் வழங்கப்படும் நிதி அன்பளிப்புகளையே அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று கூறினார்.

சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம், நோலிமிட் நிறுவனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் தொழிற் சங்கம், இலங்கை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு தாய் சங்கம், தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம், இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி ஊழியர்கள், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், நவலோக கன்ஸ்ட்ரக்ஸன் தனியார் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் நேற்று ஜனாதிபதியிடம் நிதி அன்பளிப் புகளை கையளித்தன.




தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னரே பெருந்தொகைப் பணம் பெட்டகத்தில் வைப்பு
பொன்சேகாவின் பணமென அசோகா திலகரட்ன தகவல்

* நகை வைக்கும் பெட்டகத்தில் பணம் வைக்கப்பட்டது ஏன்?
* 2000 டொலர்களை மாத்திரமே நம்முடன் வைத்திருக்க முடியும்
* ஆர்ப்பாட்டம் நடத்துவதால் சட்டத்திலிருந்து தப்ப முடியாது?



தேர்தல் நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னரே சரத் பொன்சேகா பெருந்தொகைப் பணத்தை வங்கியின் பெட்டகத்தில் வைத்துள்ளமை தெரியவந்து ள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவின் புதல்வி அப்சரா பொன்சேகா கூறியதற்கிணங்க, பொன்சேகாவின் அலுவலகத்திலிருந்தே அந்தப் பணத்தைக் கொண்டு பெட்டகத்தில் வைத்ததாக ஜெனரல் பொன்சேகாவின் மருமகனின் தாயாரான அசோகா திலகரட்ன கூறியுள்ளார்.

அவை தன்னுடைய பணம் அல்லவென்றும் அவர் கூறியுள்ளதாகக் கூறிய அமைச்சர் பீரிஸ், ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதிருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கு முகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பேராசிரியர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவையின் மற்றொரு பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும், அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்டவும் கலந்து கொண்டனர்.

சம்பத் வங்கியில் பெரிய பெட்டகமொன் றைக் கேட்டிருக்கிறார்கள். அங்கு பெரியவை இல்லாததால், திருமதி அசோகா திலகரட்னவின் பெயரில் இரண்டு பெட்டகங்களையும், மற்றையவர்களின் பெயரில் மேலும் இரண்டு பெட்டகங்களை யும் பெற்றுக்கொண்டுள்ளனர். இதன் அனைத்துத் திறப்புகளையும் அசோக்கா திலகரட்னவே வைத்திருந்தார்.

வேறு பெயர்களில் இருந்தாலும் பெட்டகங்களை அவர்தான் திறக்கமுடியும். நகைகள் வைக்கப்படும் பெட்டகத்தில் கற்றை, கற்றையாகப் பண நோட்டுக்களை வைத்திருக்கிறார்கள். வெளிநாட்டு நாணயத்தாள்களை இலங்கை ரூபாய்க்கு மாற்றவும் இல்லை.

வங்கியில் நடைமுறைக் கணக்கோ, சேமிப்புக் கணக்கோ ஆரம்பிக்காமல் மூடைகளில் பெட்டகத்தில் ஏன் வைத்தார்களென்று தெரியவில்லை. இலங்கையின் சட்டத்தின்படி வெளிநாடுகளி லிருந்து வரும் ஒருவர் பிரகடனப்படுத்தாமல் 15 ஆயிரம் டொலர் வரை கொண்டு வர முடியும்.

அதற்கு மேலதிகம் என்றால் மத்திய வங்கியின் சட்டதிட்டத்தின்படி அனுமதி பெறவேண்டும். பின்னர் இலங்கை ரூபாய்க்கு மாற்றிவிடவேண்டும். நாம் சுமாராக இரண்டாயிரம் டொலர்களை மாத்திரமே தம்முடன் வைத்திருக்க முடியும். ஆனால், அசோகா திலகரட்ன பெற்றிருந்த நான்கு பெட்டகங்களில் 527,000 அமெரிக்க டொலர் நாணயத்தாள்கள் இருக்கின்றன.

அனைத்தும் புத்தம் புது நோட்டுக்கள். வரிசைக் கிரமப்படி இலக்கங்களைக் கொண்ட அவை முன்பு பயன்படுத்தப்படாத பணத்தாள்கள். இவை எங்கிருந்து, எவ்வாறு, ஏன் கிடைத்தன என்பதைப்பற்றிய விபரங்களை அறியவேண்டாமா? இது முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பான செயல். நீதிமன்றத்தின் அனுமதியின்படி குற்றப்புலனாய்வுத்துறையினர், வங்கி அதிகாரிகள் மற்றும் அசோகா திலகரட்ன முன்னிலையில்தான் பெட்டகங்கள் திறக்கப்பட்டன.

நூறு ஸ்ரேலிங் பவுண்கள், ஒன்றரை இலட்சம் இலங்கை நாணயத்தாள் என மூன்று நாடுகளின் பண நோட்டுகளை வைத்திருக்கிறார்கள். ஆகவே இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் எந்தவொரு அரசாலும் இருக்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், சரத் பென்சேகாவின் மருமகன் மீது பாரிய மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் விரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று சுட்டிக்காட்டியதுடன், சரத் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற விசாரணையானது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே மேற்கொள்ளப்படுமென்றும், அதற்கு மேலதிகமாக உச்சநீதிமன்றத்திற்கே செல்ல வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது. குற்றமிழைத்தவர் ஆர்ப்பாட்டம் செய்விப்பதற்குத் தகுதியுடையவரென்றால், அவருக்கு விலக்களிப்பது சட்டத்துக்கு முரணான செயற்ர்பாடாகும் என்றும் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.


காலத்தின் அவசியத்தை இனங்காண்பதே மக்கள் அரசியலின் கடமையும் பொறுப்பும்

ஜனாதிபதி

அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர பகைவரும் இல்லை. காலத்தின் அவசியத்தை இனம் காண்பதே மக்கள் அரசியலின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவி பேரியல் அஷ்ரப் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து கொண்ட நிகழ்வு நேற்று (18) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து பேசிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-

அரசியலில் ஒவ்வொரு யுகம் உள்ளது. அந்த யுகங்களின் போதுதான் யுக புருஷர்கள் தோன்றுகின்றனர். இவ்வாறான ஒரு யுகத்தின் தேவையின் போதுதான் அமைச்சர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்து அதனை கட்டியெழுப்பினார். இன்று அந்த யுகம் முடிந்துவிட்டது. இன்று இந்த நாடு ஐக்கியப்பட்டுள்ளது. இன்று யுத்தம் முடிந்துள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு சுதந்திரமாக பயணம் செய்வதற்கு இருக்கும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமது பாஷையை பேசுவதற்கான சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த யுகத்தின் தேவை பலம் மிக்க அரசியல் கட்சியாக கட்டியெழுப்பப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சுற்றி சகல இனத்தவரையும் சேர்க்கும் பொறுப்பு இன்று உள்ளது. ஒரு சமூகம் அதன் கலாசாரத்தை பாதுகாத்துக்கொண்டு அதேசமயம் மற்றைய சமூகத்தின் கலாசாரத்தை கெளரவிப்பதுடன் அவர்களுடன் சுமுகமாக வாழ அனைத்து சமூகங்களும் இப்போது தயாராகி வருகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் இன்று எடுக்கப்படும் தீர்மானம் தேசிய ஒற்றுமைக்கு பெரும் உந்துசக்தியாகும். அதன் காரணமாகத்தான் இது சரித்திர நிகழ்வாகிறது.

இலங்கையர்களான எமக்கு அதிக பயன்களை தருவது பிரிந்து வெவ்வேறாக இருப்பதா? இல்லை அனைவரும் ஒன்று சேர்ந்து பலமிக்க சக்தியாக முன்னேறிச் செல்வதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.

நீங்கள் எப்போதுமே ஆழ்ந்து சிந்திக்கும் ஒரு தலைவியாவீர்கள். நீங்கள் நன்றாக யோசித்தே எந்தக்கருத்தையும் முன்வைப்பீர்கள். அவ்வாறான ஒருவர் எமது அமைச்சரவையில் இருப்பது எமக்கு மிகுந்த சக்தியை தருகிறது என்று ஜனாதிபதி கூறினார். நாட்டை கட்டியெழுப்பும் மற்றும் சகல இனத்தவர்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேருவதற்கு தேசிய ஐக்கிய முன்னணி தீர்மானித்திருந்தது.

அத்துடன் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவி பேரியல் அஷ்ரப்பும், கட்சி யின் ஏனைய உறுப்பினர்களும் இங்கு ஜனா திபதியிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண் டமை குறிப்பிடத்தக்கது.

கம்பளை விகாரை தாக்குதலில்
ஜே.வி.பி. உறுப்பினருக்கும் தொடர்பு தலை மறைவு விசாரணையில் அம்பலம்!



கம்பளை பிரதேசத்திலுள்ள பெளத்த விகாரையொன்றின் மதகுரு மற்றும் அவருடன் இணைந்த மற்றுமொருவரினது கொலைச் சம்பவம் தொடர்பில் கங்க இஹல பிரதேச சபையின் ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த ஜே.வி.பி. உறுப்பினர் தான் வசிக்கும் இடத்தை விட்டும் தலைமறைவாகி கொழும்பு பிரதேசத்தில் மறைந்து இருப்பதாகவும் மேலும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருவருடைய மரணம் தொடர்பாக பிரதான சந்தேக நபராக விளங்கும் இரா ணுவத்தை விட்டு தப்பியோடிய இருவருக் கும் கைக்குண்டொன்றை வழங்கியவர் குறிப்பிட்ட ஜே.வி.பி. உறுப்பினர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பளை தெமிலிகல ஸ்ரீ போதிரெக்காராம விகாரை வளாகத்தில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் விகாரையின் மதகுருவான மாத்தரை விமலானந்த தேரரும் மற்றும் ஐ.ம.சு.மு. ஆதரவாளர் ஒருவருமே இந்த குண்டு வெடிப்பில் மரணமாகியிருந்தனர்.

இந்த இருவரினது மரணம் தொடர்பாக மேலும் இருவரை கம்பளை பொலிஸார் கைது செய்து கம்பளை பிரதேச நீதிமன்ற நீதவான் விராஜ் பண்டார ரணதுங்கவிடம் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 26ம் திகதி வரையும் அவர்கள் இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக