18 பிப்ரவரி, 2010

ஜெனரல் பொன்சேகாவை சிவில் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் : லியாம் பொக்ஸ்



தன்மை தலையாய அம்சமாக இருக்கும் சிவில் நீதிமன்றத்திலேயே ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரணை செய்யவேண்டும் என்று பிரிட்டிஷ் நிழல் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் தெரிவித்துள்ளார்.

லியாம் பொக்ஸ் நேற்று மாலை கொழும்பில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்த பின்னர் செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:

"சட்டம் ஆதிக்கம் செலுத்தும் என்ற மனோதிடத்துடன் சகல குற்றச்சாட்டுக்களும் விசாரிக்கப்படக் கூடிய சிவில் நீதிமன்றத்திலேயே ஜெனரல் பொன்சேகா விசாரிக்கப்பட வேண்டும் என்பதே எமது திடமான கருத்தாகும்.

சிவில் நீதிமன்றத்தில் நிலவும் ஒளிவுமறைவற்ற தன்மை, உள்ளூர், சர்வதேச சமுதாயங்களுக்கு நியாயாதிக்க நடைமுறைகளில் ஒரு நம்பிக்கையைக் கட்டியெழுப்பும்.

பொன்சேகாவை சூழ்ந்துள்ள நிலைமை இலங்கையின் மதிப்புக்குக் குந்தகம் ஏற்படுத்தலாம். இந்த நாடு எதிர்காலம் பற்றிய ஒரு முக்கியமான காலகட்டத்தை எட்டும்போது, ஒரு பழிவாங்கும் செயலாக இத்தகைய ஒரு சிரேஷ்ட இராணுவ அதிகாரியை சித்திரிப்பது பொருத்தமானதாக இருக்காது.

எவ்வாறாயினும், இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பாக தீர்ப்புக் கூறுவதற்கு எந்தவொரு நாட்டுக்கும் உரிமை இல்லை. யாரை விசாரணை செய்யவேண்டும், யாரை விசாரணை செய்யக் கூடாது என்று வெளிநாடு அல்லது வெளிநாட்டமைப்பு ஒன்றினால் கூறமுடியாது.

ஆனால், நிகழ்வுகள் இடம்பெறும் விதத்தைப் பொறுத்து வெளிநாடுகள் இலங்கையைப் பற்றி புரிந்துகொள்ளும். சட்டம் நேர்மையாக அமுல்படுத்தப்பட்டால் மட்டும் போதாது. அது நேர்மையாக அமுல்படுத்தப்படுகின்றது என்பது மற்றவர்களால் உணரப்படவும் வேண்டும்.

மதிப்பு என்பது ஒரு பெரிய விடயம். இந்த நாடு பெருமதிப்பைப் பெறவேண்டிய ஒரு நாடாகும். இந்தக் குறிக்கோளை அடைய சகல அரசியல்வாதிகளும் பாடுபடுவார்கள் என்று நம்புகின்றோம்." இவ்வாறு அவர் கூறினார்.


பொதுத் தேர்தலையொட்டி பொலிஸ் விடுமுறை ரத்து




தேர்தல் கடமைகளை மேற்கொள்ளவென பொலிஸ் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அனைவரினதும் விடுமுறைகள் நாளை மறுதினம் முதல் தேர்தல் தினம் வரை ரத்துச் செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காகவும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்துவதற்காகவும் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.



சிங்களவர், படையினர், மகாசங்கத்தினர் மத்தியில் அரசு பிளவை ஏற்படுத்தியுள்ளது : ரணில்



வரலாற்றில் முதன் முறையாக சிங்கள மக்கள், படையினர் மற்றும் மகா சங்கத்தினர் மத்தியில் அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனால் செய்ய முடியாததை அரசாங்கம் இன்று செய்துள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டைப் பாதுகாத்த ஜெனரல் சரத் பொன்சேகா தேசத் துரோகியாகி விட்டார். கே.பி. இன்று தேசப்பற்றாளர் ஆகிவிட்டார் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்படவுள்ள 10 இலட்சம் மக்களின் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கையின் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஜே.ஆர். ஜயவர்த்தன நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

"குற்றங்களை முன்வைத்தே எவரையாவது கைது செய்ய முடியும். இது தான் சட்டம். அரசியலமைப்பும் இதனையே வலியுறுத்துகிறது. ஆனால், இவையனைத்தையும் மீறி ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலாகும். இன்று அவரது மருமகனின் தாயாரைகீ கைது செய்துள்ளனர். எதிர்காலத்தில் இறந்து போன அவர்களது உறவினர்களின் புதை குழிகளையும் தோண்டினாலும் அது அதிர்ச்சிக்குரிய விடயமல்ல.

எமது நாட்டு அரசியல் வரலாற்றில் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.

இவை போன்ற சம்பவங்கள் மியான்மாரில் இடம்பெற்றன. இன்று எமது நாட்டிலும் நடைபெறுகிறது. நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தோம். ஆனால், இன்று இனங்களிடையே அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது.

முதன் முறையாக சிங்கள மக்களை, மகா சங்கத்தினரை, படையினரை அரசாங்கம் பிளவுபடுத்தியுள்ளது. தாய்நாட்டை பாதுகாத்தவரை தேசத் துரோகியாக முத்திரை குத்தி நாட்டை காட்டிக் கொடுத்த கே.பிக்கு தேசப்பற்றாளன் முத்திரையை அரசாங்கம் குத்தியுள்ளது.

நாட்டில் அனைவராலும் மதிக்கப்படும் மகா சங்கத்தினர் விமர்சிக்கப்படுகிறார்கள்; அச்சுறுத்தப்படுகிறார்கள். அந்தளவுக்கு ஒழுக்கம் சீர்குலைந்து போய்விட்டது.

ஜெனரல் பொன்சேகா நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து மக்களைப் பாதுகாத்தார். அவர் தேசிய வீரர். எனவே தேர்தலின் போது அவருக்கு வாக்களித்தோர், வாக்களிக்காதோர் அனைவரும் அவரின் விடுதலைக்கான மகஜரில் கையெழுத்திட வேண்டியது அவசியமாகும்.

இது ஜெனரல் பொன்சேகாவின் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மட்டுமல்ல, நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி மனித உரிமைகளை பாதுகாப்பதற்குமான போராட்டமுமாகும்.

இந்த நாட்டை மியன்மாராக மாற்றுவதற்கு இடமளிக்க மாட்டோம். எனவே மக்கள் அனைவரும் சர்வாதிகாரத்திற்கு எதிராக அணி திரள வேண்டும்." இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சோமவன்ச அமரசிங்க

"ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு 10 லட்சம் கையெழுத்துக்கள் அல்ல, அதனையும் தாண்டி ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற வேண்டும். அவரின் விடுதலைக்காக தேசிய, சர்வதேச ரீதியில் இன்று போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனை மேலும் உத்வேகப்படுத்த வேண்டும்.

இந்த அரசாங்கத்திடம் அதிகாரம் இருக்கின்றது. ஆனால், புத்திசாலித்தனம் கிடையாது. அண்மையில் லங்கா பத்திரிகை சீல் வைக்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பால் சீல் உடைக்கப்பட்டது.

அதேபோன்று அதன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் சென்றார்கள். குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இத் தீர்ப்பு வெளியாகி அரை மணித்தியாலத்தில் ஊடகவியலாளர்களைக் கைது செய்யும்போது தன்னிடம் அறிவிக்குமாறு ஜனாதிபதி அறிக்கை வெளியிட்டார். இவ்வாறு அரசாங்கம் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.

சர்வதேச ரீதியாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் ஆளாகியுள்ளது. இதனால் ஜி.எஸ்.பி. வரிச் சலுகையும் பறிபோயுள்ளது."

திஸ்ஸ அத்தநாயக்க

"ஜெனரல் பொன்சேகாவை எதுவிதமான நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும். அரசியலமைப்புக்கு விரோதமான அரசின் நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும்."

இந்நிகழ்வில் ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, தவிசாளர் ருக்ஷன் சேனாநாயக்க, பிரதித் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் ஆர். யோகராஜன், எம். சச்சிதானந்தன், மேல் மகாண சபை உறுப்பினர்களான முஸம்மில், முஜிபுர் ரஹ்மான், எஸ். சதாசிவம் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், ஆதரவாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.




யானை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கப்படவில்லை: மனோ கணேசன்



ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கபடவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வீரகேசரி இணையத்தளத்துக்கு சற்றுமுன்னர் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் யானை சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து மனோ கணேசனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னரே தமது முடிவினை அறிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.




ஆட்சிப் பலம் சொந்த அதிகாரங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது: ஜே.வி.பி


பலத்தை சொந்த அதிகாரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அரசியலை இப்போதுதான் பார்ப்பதாகவும் பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாட்டை மீட்டெடுக்க அனைவரும் முன்வரவேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் உள்ளிட்ட 14பேர் விசாரணையின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களைச் சந்தித்தபின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புகைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் நிரபராதிகள் என்பது தெளிவாகிறது. ஏனையோரும் இவ்வாறு விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

எந்தத் தவறையும் செய்யாதவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். இது எந்த வகையில் நியாயம் என எனக்குத் தெரியவில்லை என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்




ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் 11 பேர் உள்ளிட்ட 14 பேர் நீதிமன்றத்தால் விடுதலை



தேர்தலின் பின்னர் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுவந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் 11 பேர் உள்ளிட்ட 14 பேர் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் இன்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்டோரில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் களுத்துறை மாவட்ட தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவரும் சிவிலியன்கள் இருவரும் அடங்குவர்.

குற்றப்புலனாய்புப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலங்களில் எதுவித குற்றங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பிணைகளிலன்றி முழுமையான விடுதலைக்கு உத்தரவிடுவதாகவும் நீதவான் சம்பா ஜானகி அறிவித்தார்.

இதனையடுத்து கொழும்பு 07 ராஜகீய மாவத்தையில் அமைந்துள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்ட அவர்களை அனோமா பொன்சேகா, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச வீரசிங்க ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

தாம் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் தவறாக நடத்தப்படவில்லை என விடுதலை செய்யப்பட்டோர் தெரிவித்தனர்.

தனது கணவர் உட்பட தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதாக குறிப்பிட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா சந்தர்ப்பவாத அரசியலுக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் எனத் தெரிவித்தார்.





10 இலட்சம் கையெழுத்துக்கள் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பம்



பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதிலும் 10 இலட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்வின் தலைமையில் இந்நிகழ்வு கேம்பிட்ஜ் ரெரஸில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. , ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, இடதுசாரி முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, புதிய சிஹல உறுமய, மற்றும் பெருந்தோட்டத் துறையை பிரதிநிதித்துவப்படுத்துகிற தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள் அமைப்பு, ஜனநாயகக் குழுக்கள் ஆகிய அமைப்புகள் ஊடாக இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் துரைராஜா ரவிஹரன் போட்டி






முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் துரைராஜா ரவிஹரன் போட்டியிடும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து திருகோணமலையில் இடம்பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கட்சியின் தலைவர் இரா சம்பந்தரை திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மகஜர் ஒன்றினையும் இவர்கள் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவிஹரன் 1993 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆம் ஆண்டுவரை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாஜ தலைவராக பணியாற்றியவர் எனவும் இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



முல்லைத்தீவு மாவட்டத்தில் த.தே.கூ சார்பில் ரவிஹரனை நிறுத்தக் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் த.தே.கூ சார்பில் ரவிஹரனை நிறுத்தக் கோரிக்கை
வீரகேசரி இணையம் 2/17/2010 3:45:34 டங - முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் துரைராஜா ரவிஹரன் போட்டியிடும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து திருகோணமலையில் இடம்பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கட்சியின் தலைவர் இரா சம்பந்தரை திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மகஜர் ஒன்றினையும் இவர்கள் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவிஹரன் 1993 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆம் ஆண்டுவரை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாஜ தலைவராக பணியாற்றியவர் எனவும் இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யிடும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து திருகோணமலையில் இடம்பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கட்சியின் தலைவர் இரா சம்பந்தரை திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மகஜர் ஒன்றினையும் இவர்கள் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவிஹரன் 1993 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆம் ஆண்டுவரை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாஜ தலைவராக பணியாற்றியவர் எனவும் இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக