18 பிப்ரவரி, 2010

இந்தியாவில் கடன்அட்டை மோசடியில் ஈடுபட்டிருந்த இலங்கையர் ஒருவர் கைது



இந்தியாவில் கடன்அட்டை மோசடியில் ஈடுபட்டிருந்த இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வங்கியொன்றினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் இவர் மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட குறித்த இலங்கையர் ஒரு வர்த்தகத்துறை பட்டதாரியாவார். கைதுசெய்யப்படும்போது இவரிடம் போலியான மூன்று கடன் அட்டைகள் இருந்துள்ளன. பொலிசாரின் விசாரணைக்கமைய அவரது வீட்டில் நடத்தப்பட்ட தேடுதலின்போது 110தன்னியக்கப் பணம்தரும் அட்டைகளும், 07கடன் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவிலான மோசடிகளில் ஈடுபட்டிருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.


யானைச் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதா  

யானைச் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவுக்கும் அதன் செயலாளர் டிரான் அலசுக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .தே.முன்னணியின் யானைச் சின்னத்தில் போட்டியிட மங்கள சமரவீர இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில் டிரான் அலஸ் பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமைச்சரவைப் பேச்சாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரே அமைச்சரவைப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இவ்விருவரும் கலந்துகொண்டு அமைச்சரவை முடிவுகள் பற்றி விளக்கமளித்தனர். அமைச்சரவைப் பேச்சாளராக கடமையாற்றிய அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கடந்தவாரம் அப்பதவியிலிருந்து விலகியதையடுத்து இவ்விரு அமைச்சர்களும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக 49நாடுகளிலிருந்து 7256பேர் பதிவு


தமிழகத்தில் நடைபெறவுள்ள தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக 49நாடுகளிலிருந்து 7256பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் கூறுகின்றனர். அவர்களில் 1500பேர் தமது ஆராய்வை மாநாட்டின்போது சமர்ப்பிப்பரென்று தமிழக முதல்வா மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் இலங்கையிலிருந்து 91பேரும், கடனாவிலிருந்து 23பேரும், அமெரிக்காவிலிருந்து 44பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 15பேரும், லண்டனிலிருந்து 18பேரும், சீனாவிலிருந்து 4பேரும் கலந்து கொள்கின்றனர். அத்துடன் 6800பேரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் உபதலைவராக போட்டியிடவுள்ளாரென்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கட்டுகளை வீழ்த்தி முத்தையா முரளிதரன் உலக சாதனை படைத்துள்ளார். முத்தையா முரளிதரனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இணைப்பதன்மூலம் தமிழ் சிங்கள இளைஞர்களின் வாக்குகளைக் கவரமுடியும் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சனத் ஜயசூரிய ஆளும் கட்சியில் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். எனினும் முத்தையா முரளீதரன் இது குறித்து உத்தியோகபூர்வமாக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லையென்று கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு வைத்தியசாலை இராணுவத்தினரால் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளிடம்

 

முல்லைத்தீவு வைத்தியசாலை இராணுவத்தினரால் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வன்னியில் இறுதியுத்தம் நடைபெற்ற பகுதியில் முல்லைத்தீவு வைத்தியசாலை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வைத்தியசாலையில் இருந்த மருந்துகள் மற்றும் கருவிகள், உபகரணங்கள் போன்றவை புத்துவெட்டுவான் பகுதியில் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றை படையதிகாரிகள் விரைவில் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் முதல் 9 வீதியின் ஊடாக யாழ் செல்வோரின் எண்ணிக்கைஅதிகரிக்கும்

 
இவ்வருடம் முதல் 9 வீதியின் ஊடாக யாழ் செல்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதுடன் அதனூடான வருமானமும் அதிகரிக்கலாமென இலங்கை பேருந்துசபை தெரிவித்துள்ளது. தற்போது 9 வீதியூடாக யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்குமிடையில் நாளாந்தம் 600பயணிகள் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பயனை தற்போது அரசாங்கம் அனுபவிப்பதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் மேலும் பேருந்து சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை போக்குவரத்து சபையினால் யாழ் கொழும்பிடையே 10பஸ்சேவைகள் நடத்தப்படுகின்றன. யாழ். கண்டிக்கிடையில் 04பஸ்சேவைகளும், யாழ் திருமலையிடையே 02பஸ் சேவைகளும், மட்டக்களப்பிலிருந்து யாழுக்கு 02பஸ் சேவைகளும் இடம்பெற்று வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக