8 பிப்ரவரி, 2010


பொன்சேகா மீது ஆட்சிக் கவிழ்ப்பு புகார்: பத்திரிகையாளர்களிடம் விசாரிக்க இலங்கை முடிவு


இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்பு செய்ய சதித்திட்டம் தீட்டியதாக முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து அவருடன் இருந்த பத்திரிகையாளர்களிடமும் விசாரணை நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பொன்சேகா,​​ கொழும்பில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாகவும்,​​ அதிபர் ராஜபட்சவை சுட்டுக்கொல்ல திட்டமிட்டதாகவும் அவர் மீது புகார் எழுந்தது. பொன்சேகாவின் ஆதரவாளர்கள் ஹோட்டலில் 70க்கும் மேற்பட்ட அறைகளில் ​ தங்கியிருந்தனர்.​ அங்கு ராணுவ வீரர்களும்,​​ அதிகாரிகள் சிலரும் இருந்துள்ளனர்.​ அவர்களிடம் ஏராளமான ஆயுதங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.​ இதைத் தொடர்ந்து அவர்கள் மீது இலங்கை அரசு வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறது.​ இந்நிலையில் பொன்சேகாவுடன் இருந்த பத்திரிகையாளர்களிடமும் விசாரணை நடத்த இலங்கை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி அரசு இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. ஹோட்டலில் தங்கியிருந்தபோது ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் பொன்சேகா மேற்கொண்ட திட்டம் குறித்து அறிவதற்காக பத்திரிகையாளர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.​ ஏற்கெனவே இந்த புகார் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் சிலரிடம் இலங்கை அரசு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.​ இந்நிலையில் பத்திரிகையாளர்களிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்ற செய்தியால் இந்த புகார் மேலும் பரபரப்படைந்துள்ளது.​ இதனிடையே தேர்தலுக்கு முன்பாக தெற்கு இலங்கையிலும்,​​ கொழும்பு புறநகர் பகுதியிலும் சில இடங்களில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.​ ராஜபட்சவை சுட்டுக்கொல்லும் சதித்திட்டத்துக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.​ பொன்சேகாவிடமிருந்து உத்தரவு வந்தபிறகு சதித்திட்டத்தை நிறைவேற்ற அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.இதனிடையே கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள கோயிலிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து புத்தமத பிக்கு ஒருவரை போலீஸôர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி கண்டனம்:​​ பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது இலங்கை அரசு திட்டமிட்டு பழிபோடுவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.​ தேர்தல் வெற்றிக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களை இலங்கை அரசு தேடிப்பிடித்து பழிவாங்குவது கண்டிக்கத்தக்கது என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரை தலைமை தேர்தல் ஆணையர் தயானந்த திஸ்ஸநாயக மறுத்துள்ளார்.​ தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஊகத்தின் அடிப்படையில் தெரிவித்துள்ள புகார்களை முற்றிலும் மறுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
விமானங்கள் நடுவானில் மோதல்:​ மூவர் சாவு


கொலராடோ, ​​ பிப்.​ 7:​ அமெரிக்காவில் கொலராடோவில் இரண்டு சிறிய வகை விமானங்கள் வானில் மோதி கீழே விழுந்து நொறுங்கியதில் மூவர் இறந்தனர். கொலராடோ விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை கிளைடரை அழைத்துச் செல்லும் சிறிய வகை விமானம் வானில் புறப்பட்டது.​ வானில் கிளைடரை விலக்கிய சிறிது நேரத்தில் மற்றொரு விமானத்துடன் மோதியது.​ விபத்துக்குள்ளான இரு விமானங்களும் தீப்பிழம்புடன் கீழே விழுந்து நொறுங்கின.​ இரு விமானங்களிலும் பயணம் செய்த மூவர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான இரு விமானங்களும் சிறிய வகை வாடகை விமானங்களாகும்.​ அதில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை.​ எனினும் விபத்துக்குள்ளான ஒரு விமானத்தில் இருந்த மூன்று பேர் உயிர்ப் பிழைத்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.



மூவாயிரம் டயனோசரஸ் கால் சுவடுகள் சீனாவில் கண்டுபிடிப்பு











மூவாயிரம் டயனோசரஸ் கால் சுவடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவையாக டயனோசரஸ் கருதப்படுகிறது. இவற்றின் கால் சுவடுகள் சீனாவில் கிழக்கு ஷான் டோங் பகுதியில் உள்ள ஷு செங் நகரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மூவாயிரம் டயனோசரஸ்களின் கால் சுவடுகளை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக ஷின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவை 10 செ.மீட்டர் முதல் 80 செ.மீட்டர் வரை நீளம் கொண்டவை என்றும் டிரானோசரஸ் கோயெழுரோசரஸ் மற்றும் ஹெட்ரோசரஸ் வகைகளை சேர்ந்தவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இவை மலைப் பகுதியில் உள்ள பாறை களில் 2600 ச.மீட்டர் பரப்பளவில் இருந்து கண்டெடுக்கப்பட்டன













பணிகள் வவுனியாவில் மீண்டும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.இத்திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் படுவோர்க்கென 8 ஆயிரத்து 900 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார்.

மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கமைய ஐரோப்பிய ஆணைக்குழு 3 ஆயிரத்து 900 வீடுகளையும் உலக வங்கி 5 ஆயிரம் வீடுகளையும் அமைத்துக்கொடுக்க முன்வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்போது சுமார் 75 ஆயிரம் பேரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையிலுமே மீளக் குடியமர்த்தப்படவிருக்கின்றனர்.

நிலக்கண்ணிவெடி அகற்றலில் ஏற்பட்ட தாமதத்தினால் சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீள்குடியேற்றப் பணிகள் கடந்த 02 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 02 ஆம் திகதி பூநகரிக்கு ஆயிரம் பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேவேளை இன்று கிளிநொச்சி மாவட்டம் கரச்சி பிரதேசத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தங்கியிருக்கும் 300 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப் படவிருப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.



ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு மீண்டும் ஆதரவு : மட்டு. முதல்வர்


முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவாக செயற்படத் தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவித்த அவர்,

“ஜனாதிபதித் தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தேன். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையவில்லை. இன்னும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இருந்து வருகிறேன்.

அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதே பொருத்தமானது என நினைக்கிறேன். எனினும் எனது நிலைப்பாடு தொடர்பாக கட்சியின் உயர்மட்ட தீர்மானங்களை கருத்திற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்"என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக