8 பிப்ரவரி, 2010

..முன்னணிக்குள் பிளவு : ..முன்னணியில் பாரதிதாசன் இணைவு



மலையக மக்கள் முன்னணியின் உபதலைவரும் சிரேஷ்ட உறுப்பினருமான பாரதிதாசன் சுமார் 2000 ஆதரவாளர்களுடன் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைந்துள்ளார். கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவராக இருந்த அமைச்சர் சந்திரசேகரனின் மறைவையடுத்து அவரது மனைவி தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதனால் கட்சியின் சில உறுப்பினர்களுக்கிடையே கருத்து முரண்பாடு நிலவி வந்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் சுமார் 2000 பேர் வரையிலான ஆதரவாளர்களுடன் பாரதிதாசன் தமது கட்சியில் இணைந்து கொண்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

பாரதிதாசனை கட்சியின் உபதலைவர்களுள் ஒருவராக இணைத்துக் கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை இன்று மாலை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்



ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பியதும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்?



உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ரஷ்யாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பியதும் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

அவர் நாளை மறுதினம் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 26 ஆம் திகதி நடத்தப்பட்ட ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார்.

இதனையடுத்து தனது இரண்டாவது தவணைக்காலம் எப்போது ஆரம்பமாகி எப்போது நிறைவு பெறுகின்றது என்பது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்குமாறு உயர்நீதிமன்றத்திடம் எழுத்து மூலமாக கோரியிருந்தார்.

அது தொடர்பில் பிரதம நீதியரசர் அசோக என் சில்வா தலைமையிலான நீதியரசர்களான ஷிராணி பண்டாரநாயக்க, பாலபெத்த பெந்தி, ஸ்ரீபவன், ஏக்கநாயக்க, சந்திரா ஏக்கநாயக்க, இமாம் ஆகிய ஏழு நீதியரசர்கள் குழு கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமை (10) விரிவாக ஆராய்ந்தனர்.

இந்த ஆலோசனைகள் மறுநாள் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது , அதன் பிரகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது அதன் பிரகாரமே ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது





ஒரு லட்சம் தொழிலாளரின் தொழிலை பாதுகாக்க அரசின் மாற்றுத் திட்டம் என்ன?




ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வருகின்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டம் நிறுத்தப்படவுள்ளதாக தெரிகின்றது. அவ்வாறெனின் சுமார் ஒரு இலட்சம் தொழிலாளர்களின் தொழில்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள மாற்றுத்திட்டம் என்னவென்று கேட்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரவி கருணாநாயக்க எம்.பி. இது தொடர்பில் தொடர்ந்து கூறியதாவது

"ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டத்தை நிறுத்துவதற்கு ஒன்றியம் தீர்மõனித்துள்ளதாக தெரியவருகின்றது.

இது மிகவும் அவதானமான நிலைமை என்பதனை குறிப்பிடுகின்றோம். இதன் மூலம் எமது நாட்டின் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டு சிக்கல்கள் ஏற்படலாம். அத்துடன் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படலாம்.

இவற்றையெல்லாம் விட முக்கிய விடயமாக சுமார் ஒரு இலட்சம் பேர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலைமை காணப்படுகின்றது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நாங்கள் இலகுவில் கருதிவிட முடியாது.

அந்தவகையில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டத்தை எமது நாடு இழக்கும் பட்சத்தில் குறித்த ஒரு இலட்சம் பேரின் தொழில்வாய்ப்புக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திடம் மாற்றுத்திட்டம் ஒன்று கட்டாயம் இருக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அதனடிப்படையில் அரசாங்கத்திடம் காணப்படுகின்ற மாற்றுத்திட்டம் என்னவென்று பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் வினவுகின்றோம். ஒரு இலட்சம் பேரின் தொழில்வாய்ப்பை பாதுகாப்பதற்கான அரசின் திட்டம் என்பது தொடர்பில் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.



வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்களின் தொகையை குறைக்க பிரிட்டன் முடிவு




வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிரிட்டனில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன.

மாணவ விசாக்களை வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஆங்கிலம் பேசும் ஆற்றல் இருக்க வேண்டும் என்பதும் குறுகியகால பிரிட்டிஷ் கற்கை நெறிகளுக்கு வருவோர் அவர்களில் தங்கியிருப்போரையும் தம்முடன் அழைத்து வருவதை தடை செய்தல் போன்றவை உட்பட பல கட்டுப்பாடுகள் அமுல்செய்யப்பட இருக்கின்றன என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார்.

உண்மையாக கல்வி கற்க வருவோரை இலக்கு வைத்து இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர், தொழில் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பிரிட்டன் வருவோருக்காகவே இந்த நடவடிக்கை என்றும் கூறினார்.

தோல்வியில் முடிவடைந்த சிக்காகோ விமானக் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதம மந்திரி கோர்டன் பிரவுணின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் ஜோன்ஸன் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நத்தார் தின குண்டு வெடிப்பை நடத்தியதாக கூறப்படும் உமர் பாரூக் அப்துல் முதலாப் லண்டனில் கல்வி கற்றவர் என்றும் பிரிட்டனிலிருந்து சென்ற பின்னர் யெமெனில் அல்குவைதா இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர் என்றும் பிரதமர் கூறியதன் பின்னர் இந்த மதிப்பீட்டுக்கு உத்தரவிடப்பட்டது.

2008 / 2009 ஆண்டு காலத்தில் பிரிட்டன் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் மாணவ விசாக்களை வழங்கியது. தற்போதைய நடவடிக்கையால் வெளிநாட்டு மாணவ விசாக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறையலாம் என்று தெரிவித்த உள்துறை அலுவலக பேச்சாளர், எவ்வாறாயினும் பல்லாயிரக்கணக்கில் வீழ்ச்சி ஏற்படும் என்று வெளியான அறிக்கைகளை நிராகரித்தார்.

ஒரு சில வாரங்களுக்குள் அமுல் செய்யப்படவிருக்கும் இந்த நடவடிக்கை தொடர்பாக சட்டம் ஒன்று இயற்ற வேண்டிய தேவை இல்லை. நேபாளம், வட இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட மாணவ விசாக்கள் அதிக அளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் அந்நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்படும் மாணவ விசாக்கள் இடைநிறுத்தப்பட்டு ஒரு வாரத்திற்குள் மேற்படி புதிய நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உச்சவரம்பை உயர்த்துதல்

பிரிட்டனுக்கு வரவிரும்பும் மாணவர்களுக்கான தகைமையில் 40 புள்ளிகளை பெறவேண்டும் என்ற தேவையை கடந்த வருடம் பிரிட்டன் அறிமுகம் செய்தது. ஆனால் பயங்கரவாதிகளும் ஏனையோரும் இதன் மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்து விடுவார்களெனக் கூறி பல விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது கல்வி கற்கும் நோக்கத்தை தவிர்த்து முக்கியமாக வேலை செய்யும் முக்கிய நோக்கத்துடன் பிரிட்டன் வருவோரை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார்.

தற்போதைய தீர்மானத்தின்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளாவன:

* ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதில் தற்போதுள்ள ஆரம்ப மட்ட அறிவிலும் பார்க்க ஜி சி எஸ் ( ) தரத்திற்கு சிறிது குறைந்த மட்ட அறிவையேனும் பெற்றிருக்க வேண்டும்.

* பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த கற்கைநெறிகளை பின்பற்றுவோர் தற்போதுள்ள 20 மணிநேர வேலைக்கு பதிலாக இனிமேல் 10 மணி நேர வேலை செய்வதற்கே அனுமதிக்கப்படுவார்கள்.

* 6 மாதங்களுக்கு குறைந்த கற்கைநெறிகளுக்காக வருவோர் அவர்களில் தங்கியிருப்போரை அழைத்து வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் பட்டப்படிப்பு நெறிகளுக்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவோருடன் வரும் அவர்களில் தங்கியிருப்போர் பிரிட்டனில் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* இவற்றுக்கு மேலாக, மாணவர்களை அனுமதிக்கும் கல்வி நிறுவனங்கள் அதி உயர் நம்பக தன்மையைக் கொண்ட அனுசரணையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அங்கு பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவதற்கான விசாக்கள் வழங்கப்படும்.



பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னரே கட்சிகளுக்கிடையிலான தேர்தல் பணிகள் சூடுபிடிப்பு



கலைக்கப்படாதிருக்கின்ற நிலையில் அடுத்து நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான அரசியல் நடவடிக்கைகள் பிரதான கட்சிகளிடையே சூடு பிடித்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதானமாக கொண்டுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதானமாக கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி. ஆகிய முன்னணிக் கட்சிகள் பொதுத் தேர்தலில் எவ்வாறு களமிறங்குவது என்று வியூகம் அமைத்து வருகின்ற அதேவேளை வேட்பாளர்களை தெரிவு செய்வதிலும் முனைப்பான நடவடிக்கைகளைக் கொண்டுள்ளன.

இதேவேளை கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சத்தியாக்கிரக எதிர்ப்புக் கூட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தான் பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

ஆளும் கட்சி

அந்த வகையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகள் மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆகியோரைக் கருத்திற் கொண்டு தமது முன்னணியூடாக களமிறங்கும் வேட்பாளர்களைத் தெரிவதற்கென ஒரு குழுவும் அதே நேரம் வேட்பாளர் தெரிவில் சிக்கல் நிலை தோன்றும் பட்சத்தில் அதனைத் தீர்த்து வைப்பதற்கு மற்றுமொரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ஜோன் செனவிரட்ண, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரைக் கொண்ட வேட்பாளர் தெரிவு அதிகாரிகள் நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் மூன்றாக பிரித்து அதனடிப்படையில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று கூடுகிறது

இதன்படி கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்றும் நாளையும் கூடுகின்ற மேற்படி தெரிவுக் குழுவினூடாக ஆளும் கட்சி சார்பிலான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பிரதமர் தலைமையில்

இதேவேளை பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க தலைமையில் பஷில் ராஜபக்ஷ எம்.பி. அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன மற்றும் டளஸ் அழகப் பெரும ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவிடம் வேட்பாளர் தெரிவு தொடர்பில் குளறுபடிகள் அல்லது பக்கச்சார்பு இடம்பெற்றிருப்பின் முறையிட்டு அக்குழுவினூடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.க.

பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் தமது வேட்பாளர் தெரிவு நடவடிக்கைகளை நாளை மறுதினம் புதன்கிழமை ஆரம்பிக்கின்றது.

கட்சியின் நாடு முழுவதிலுமுள்ள தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர்களையும் அதன் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்கு அழைத்திருக்கின்ற கட்சியின் உயர் மட்டம் அவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த முக்கிய கலந்துரையாடலுக்கு அனைத்து அமைப்பாளர்களும் இதில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதானமாகக் கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்கள் ஒதுக்கப்பட வேண்டியிருப்பதால் அது தொடர்பிலும் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் எதிர்க் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணியில் தற்போது 16 அரசியல் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்ற அதே வேளை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவை யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிலும் சில சிக்கல்கள் தோன்றியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

ஜே.வி.பி. மந்திராலோசனை

இது இவ்வாறிருக்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு களமிறங்குவது என்பது தொடர்பில் மந்திராலோசனைகள் இடம்பெற்று வருவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் போது இணைந்திருந்த எதிர்க் கட்சிகளின் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பிலும் அதே நேரம் எந்த சின்னத்தின் கீழ் போட்டியிடுவது என்பது தொடர்பிலும் இங்கு கட்சிகளிடையே சிறிதளவான முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும் எனினும் இந்த முரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு எட்டப்படும் என்றும் அக்கட்சி வட்டாரத்தில் இருந்து தெரிய வருகின்றது.

தே.சு.மு. 19;ஹெல உறுமய 5

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளும் தமது வேட்பாளர்களை களமிறக்குவது தொடர்பில் தீர்மானித்துள்ளன.

இதன்படி தேசிய சுதந்திர முன்னணி வடக்கைத் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் போட்டியிட தீர்மானித்துள்ள அதேவேளை தமது கட்சியின் சார்பில் 19 பேரை வெற்றிலைச் சின்னத்தில் களமிறக்குவதாகவும் அது தொடர்பிலான பெயர்ப் பட்டியலை ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவிடம் சமர்ப்பித்திருப்பதாகவும் அந்த முன்னணி தெரிவித்துள்ளது.

அதே போல் ஜாதிக ஹெல உறுமயவைப் பொறுத்தவரையில் தமது கட்சி கொழும்பு உட்பட 5 மாவட்டங்களில் மாத்திரமே 5 வேட்பாளர்களை களமிறக்குவதாகவும் ஏனைய பகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான நிதி வசதிகள் இல்லையென்றும் அக்கட்சியின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

முடிவெடுக்கவில்லை

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து மலையக மக்கள் முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இதுவரையில் தீர்மானங்கள் எதுவும் எடுக்கவில்லையென தெரிவித்துள்ளன.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னரே அது குறித்து சிந்திக்க வேண்டியிருப்பதாகவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவி திருமதி சந்திரசேகரனை தேர்தலில் போட்டியிட வைப்பதா என்பது தொடர்பிலும் பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா. வெற்றிலையில்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நாடு முழுவதிலும் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளது.

ஐ.ம.மு.

இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிப்பதால் அது யானைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது. வடக்கு, கிழக்கு தவிர்ந்த தமிழ் மக்கள் செறிந்து வாழும் சகல பிரதேசங்களிலும் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் களமிறங்குவர்.


நாளை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஏபரல் 8 இல் தேர்தல்:அமைச்சர் ராஜித சேனாரட்ண தகவல்




நாளை 9 ஆம் திகதி கலைக்கப்படும். பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியமுள்ளது என்று பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை தேர்தலில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும். ஜனாதிபதி தேர்தலில் போன்றே பொதுத் தேர்தலிலும் நாங்கள் வெற்றியடைவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் ராஜித சேனாரட்ண இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மகத்தான வெற்றியை பெற்றது. மக்கள் எமது வேலைத்திட்டங்களை அங்கீகரித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதிலும் மக்கள் எங்களை அமோக வெற்றியடையச் செய்வார்கள் என்று நம்புகின்றோம்.

அந்தவகையில் பாராளுமன்றம் நாளை மறுதினம் 9 ஆம் திகதி கலைக்கப்படும். இது நம்பகரமான தகவலாக உள்ளது. அதேபோன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் அதிகமுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும். மேலும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்கால திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயார் நிலையில் இருப்பதாக தெரிகின்றது. எனவே இந்த தேர்தலில் கூட்டமைப்பு சிந்தித்து செயற்படும் என்று நம்புகின்றோம்.

வடக்கு கிழக்கு மக்கள் நாட்டின் தேசிய அரசியல் செயற்பாட்டில் இணைந்துகொள்ளவேண்டும். தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எனவே வடக்கு கிழக்கு மக்கள் தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.

முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மகத்தான வெற்றியை பெற்றது. மக்கள் எமது வேலைத்திட்டங்களை அங்கீகரித்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

அதிலும் மக்கள் எங்களை அமோக வெற்றியடையச் செய்வார்கள் என்று நம்புகின்றோம். அந்தவகையில் பாராளுமன்றம் நாளை மறுதினம் 9 ஆம் திகதி கலைக்கப்படும். இது நம்பகரமான தகவலாக உள்ளது. அதேபோன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் அதிகமுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும். மேலும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்கால திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயார் நிலையில் இருப்பதாக தெரிகின்றது. எனவே இந்த தேர்தலில் கூட்டமைப்பு சிந்தித்து செயற்படும் என்று நம்புகின்றோம்.

வடக்கு கிழக்கு மக்கள் நாட்டின் தேசிய அரசியல் செயற்பாட்டில் இணைந்துகொள்ளவேண்டும். தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எனவே வடக்கு கிழக்கு மக்கள் தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக