8 பிப்ரவரி, 2010

புலிகளை ஏமாற்றிய சம்பந்தரும் ஐக்கியப்பட மறுக்கும் தமிழ்கட்சித் தலைவர்களும்;



தேர்தல் தெருக்கூத்துக்கள் யாவும் முடிந்துவிட்டது மீண்டும் அடுத்த தேர்தலுக்கான சமிஞ்சைகள் வெளிவரத்தொடங்கிவிட்டது தமிழ்கட்சிகளின் தலைவர்கள் தமது வெற்றிக்காக வியுகங்களை நெறிபடுத்த தொடங்கிவிட்டார்கள் யாரும் தமிழ்ர்களின் ஐக்கியத்தைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை கூட்டமைப்பும், ஈபிடிபியும் தனித்துபோட்டியிடப் போவதாக அறிவித்துள்ளர்கள் ஏனைய தமிழ்கட்சிகளின் நிலைப்பாடுகளை இன்னும் சில நாட்களில் எதிர்பார்க்கலாம்

இத்தேர்தலிலாவது அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்துபோட்டியிடுவார்களென எதிர்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றமே எஞ்சியுள்ளது கூட்டமைப்பை வழிநடத்திச் செல்லும் மிதவாத போக்குடைய தலைவர்களினால் எமது மக்களின் அரசியல் அங்கீகாரம் சிதைக்கப்பட்டுவருகின்றது இதனை உணர்ந்தாவது முன்னால் விடுதலை இயக்கங்களின் தலைவர்கள் ஒரு புரிந்துணர்வுடன் செயற்ப்பட முன்வரவேண்டும்என்பது பலரது எதிர்பார்ப்பாகும்

கூட்டமைப்பு என்றுமே ஏனைய தமிழ்கட்சிகளுடன் இணைவதற்கு முன்வரமாட்டார்கள் காரணம் தமிழ்தேசிய இனவாத சக்திகளின் நிதியில்தான் கூட்டமைப்பு உயிர்வாழ்ந்துகொண்டிருக்கின்றது எனவே அவகளின் கைப்பாவையாக இருக்கும்வரையில் சுயமாக செயற்படுவார்களென எதிர்பார்க்கமுடியாது தமிழீழ கனவை நனவாக்க துடிக்கும் தமிழ் குறுந்தேசியவாதிகளுக்கு கூட்டமைப்பு போன்ற சொல்வதை செய்யும் கோடாரிக் காம்புகள்தான் தேவை அதற்காக முன்னால் போராளிக்குடும்பங்களையும், மாவீரர் குடும்பத்தினரையும் தேர்தல்கால பணிகளில் ஈடுபடவேண்டுமென பணிப்புரைவிடுத்துள்ளார்கள்

கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பலருக்கு தமிழ்கட்சிகளுடன்
ஒன்றினைந்து தேர்தலில் போட்டியிட மனதளவில் விருப்பமிருந்தாலும் தடையாக இருப்பவர்கள் தனிநாட்டு கோரிக்கையை ஆதரிக்கவில்லையென்று கூறும் இரா சம்பந்தன் போன்றவர்களேயாகும் தனிநாட்டு கோரிக்கையை ஆதரிக்காத கூட்டமைப்பு தலைவர் தனது பதவிக்காக தமிழீத்தற்காக போராடிய புலிகளை மட்டுமில்லாது மக்களையும் புத்திசாதுர்யமாக ஏமாற்றியுள்ளார் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் பச்சொந்தித் தனமாக பேசும் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு தேவைதான.

ஆகவே புளொட், ஈபிடிபி,ஈ பி ஆர் எல் எப் ,(நாபாஅணி) டியுஎல்எப் யுடன் ஏனைய தமிழ்கட்சிகளும் ஒருகுடையின் கீழ் தேர்தலில் போட்டியிட்டால் எமது வாக்குகள் சிதறடிக்கபடாமல் ஒருபலமான அரசியல் சக்தியை தோற்றுவிக்கமுடியும் இதற்காக மாற்றுக்கருத்துடைய சாகல இயக்கங்களின் உறுப்பினர்களும் தம்தமது கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும் எமக்கிடையே உள்ள கருத்து முரண்பாடுகளை ஒருபுறம் ஒதுக்கிவதை;துவிட்டு தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் விடிவுக்காக ஐக்கியப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்

மத்தியகிழக்கிலிருந்து உமாவசந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக